Narad Jayanthi celebrations were held in different district headquarters of Dakshin Tamilnadu. Journalists from various fields were felicitated for their contribution to journalism. In Trichy around 45 people attended including 17 media persons, wherein Shri P N Sankararaman, Senior Journalist and Sri Narasimhamurthy were felicitated. Shri K Natarajan, IBS, All India Radio presided over the event. Shri Krishna Muthuswamy, Dakshin TN Prachar Pramuk addressed the gathering. In Tirunelveli, around 40 people attended wherein Shri Sankararaman and Shri Kamraj were feliicitated. Shri Sundara Avudaiyappan, IBS, All India Radio presided over the event.
விஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென் தமிழகம் திருச்சி விபாகின் சார்பாக உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரதர் மகரிஷியின் ஜெயந்தி விழாவானது திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் ஸ்ரீ யில் 25-07-2018 அன்று மாலை 5 மணி முதல் 7 மணி வரை இனிதாக நடைபெற்றது. இவ்விழாவில் சக பராந்த காரியவாக் ஸ்ரீ சுப்பிரமணியன் ஜி அவர்கள் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கே.நடராஜன் I.B.S , நிர்வாக இயக்குனர் All India Radio , திருச்சி. அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். ஜில்லா பிரசார் பிரமுக் ஸ்ரீ ரவி சுந்தர் ஜி அவர்கள் வரவேற்புரையும் உப நகர் சம்பர்க் பிரமுக் ஸ்ரீ ராஜேஷ் ஜி அவர்கள் மகிழுரை வழங்கினார்கள்.நகர் சம்பர்க் ப்ரமுக் ஸ்ரீ ரஜினிகாந்த் ஜி விழா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். கடவுள் வாழ்த்துப் பாடல் நகர் காரியவாக் ஸ்ரீ பத்ரி அவர்களால் பாடப்பெற்றது.
இவ்விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் ஸ்ரீ சங்கர் ராமன் ஜி மற்றும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவர்களுக்கு ஸ்ரீ நடராஜன் அவர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
ஸ்ரீ நடராஜன் அவர்களின் முன்னுரை :
இந்தியாவிலே சிறந்த ஊடகத்துறையான அகில இந்திய வானொலி சார்பாக என்னை அழைத்தமைக்கு நான் பெருமைபடுகிறேன். இந்த நாடு எப்படி இருக்கிறது ,எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் அறிய வேண்டும் நாம் எப்படி முன்னிலை படுத்துகிறோமோ அப்படி தான் இந்த சமுகம் இருக்கும் .நல்ல விசயங்கள் முன்னிலை படுத்தினால் நல்லதே நடக்கும். அதே சமயம் சமுகத்தை பதற வைக்கின்ற அல்லது பற்ற வைக்கின்ற விஷயங்களை முன்னிலை படுத்தும்போது தீமையே அதிகமாக நடக்கும்.அகில இந்திய வானொலியானது ஆரம்பகாலத்திலிருந்தே இன்று வரை நல்ல செய்திகளை மட்டுமே வழங்கி இந்த தேசத்தை நல்வழி படுத்தக்கூடிய நல் ஊடகமாக நம்மிடம் பயணித்து கொண்டு வருகிறது. இந்தியா தான் உலகிற்கு வழிகாட்டக்கூடிய சமுகமாக இருந்தது, இருக்க வேண்டும், இருக்கப் போகிறது ,அதற்க்கு நாம் இளைஞர்களிடம் இந்த கேட்டல் மரபை கொண்டு சேர்க்க வேண்டும்.வன்முறை காட்சியை தொலைகாட்சியில் பார்த்துக் கொண்டே இருப்பதால் வன்முறை நிகழ்கிறது .ஊடகம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறு உதாரணம் சொல்ல விரும்புகிறேன்.நான் மதுரையில் பணியாற்றும் பொழுது சூழல் செய்தி வழங்குவது வழக்கம். அன்று அனைத்து பத்திரிக்கைகளில உலக அழகி தேர்வான செய்தியே முன்னிலை படுத்தப்பட்டு தலைப்புச் செய்தியாக இருந்தன. ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவி புகழ்பெற்ற காலனி தயாரிக்கும் நிறுனத்திற்கு எழுதிய கடிதத்தில் “ உங்கள் தயாரிப்பின் மேன்மை கண்டுதான் கடைகளுக்குச் சென்று நாங்கள் காலணிகளை வாங்குகின்றோமே தவிர அதைச் சுற்றியுள்ள பாலிதீன் உறைக்காக இல்லை, சுற்றுசுழலை பாதுகாக்கவும் ” என்று எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தைக் கண்டு அந்த நிறுவனம் பாலிதீன் பயன்பாட்டினை நிறுத்திக்கொண்டது.இதை அந்நிகழ்சியில் சுட்டிக்காட்டி என்னுடைய பார்வையில் இவளும் ஒரு உலக அழகிதான் என்று வர்ணித்தேன்.சிலநேரங்களில் ஊடகங்கள் சில காட்சிகளை காட்டாமல் தவிர்ப்பதும் நம் சமுகத்திற்கு நல்லதே.
ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி அவர்களின் சிறப்புரை :
இந்த நிகழ்ச்சி ஊடகம் சார்ந்த நிகழச்சி.ஊடகத்தில் செய்தி வருவதற்க்கான நிகழ்ச்சி அல்ல.நம்முடைய ஜனநாயகத்தை தாங்கியிருக்கின்ற மூன்று துறைகளை கண்காணித்து சரியாச் செயல்படுகிறதா என்று கடிவாளம் போட்டு இழுத்து பிடிக்க கூடிய நான்காவது துறை ஊடகத்துறை. அனால் துருதிஷ்டவசமாக இந்த நான்கு தூண்களும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துக் கொண்டு வருகிறது. அதிகார மற்றும் அரசியல் துறையில் ஊழல் இருப்பதை நாம் அறிகிறோம்.நீதி துறையில் நீதி வாங்கப்படுகிறதா அல்லது வழங்கப்படுகிறதா என்பது இன்று ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஊடகத்துறையும் இவைகள் போல் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஒருகாலத்தில் பத்திரிக்கை துறை சுதந்திர போராட கருவியாக இருந்தது.திலகர் மற்றும் பாரதியார் போன்றோர் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பத்திரிகைகளை துவங்கி குடும்பத்தை இழந்து சிறையில் வாடினர். இன்று 1990 க்குப் பிறகு உலகமையமாக்களால் பத்திரிகை தொழில் துறையாக மாறிவருகிறது. நம்முடைய வாழ்க்கை கலாசாரம், அறம், தர்மம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது.அதுவரை சமுதாயம் நன்றாக இருந்தது .அனால் இன்று பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் நம்முடைய ஆங்கில கல்வியின் தாக்கமே ஆகும். இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள யதார்த்த உண்மை நிலையை விளக்குவதே விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் தேச பணியாகும்.அதன் தொடக்கமே இந்த ஸ்ரீ நாரத ஜெயந்தி ஆகும் .கடந்த காலங்களில் கோயில் திருவிழாக்களையொட்டி நடைபெறும் தெருக் கூத்துகளில் நடைபெற்ற பாஞ்சாலி சபதம் காட்சிகளில் நடித்த கலைஞர் கூட,முந்தைய நாளில் கோயிலுக்கு சென்று அம்மனிடம், எனது தொழிலுக்காக நான் ஒரு பெண்ணின் சேலையை உருவும் காட்சியில் நடிக்கப்போகிறேன். என்னை மன்னித்து அருளவேண்டும் என்று கூறி மடியில் அக்னியை கட்டிக்கொண்டு மன்றாடிய பாரம்பயத்தில் வந்தவர்கள் நாம். உலகின் முதல் ஊடகவியலாளர் நாரதர். உலகின் நன்மைக்காக நல்ல செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் நாரதர். அவரைப் போலவே பத்திரிக்கையளர்கள் நாட்டில் அறம் சார்ந்த செய்திகளை சமூகத்திற்கு முன்னிலை படுத்தி வழங்க வேண்டும்.
Earlier in Madurai, Narad Jayanthi celebrations senior journalist Shri B Thirumalai was felicitated. Shri Suryanarayanan, Dakshin Tamilnadu Sah Prachar Pramuk addressed the gathering. Around 35 media persons participated. Smt Ramadevi Prasad presided over the event. Shri K Chandran, Madurai Mahanagar Sanghachalak K Chandran and Nagar Sanghachalak Shri N Srinivasan guided.
மதுரையில் ஜுலை 4ம் தேதி நாரதர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. பத்திரிகை துறையில் தேசிய சிந்தனையுடன் பணியாற்றி வரும் திரு. ப. திருமலை அவர்களுக்கு நாரதர் விருது வழங்கப்பட்டது.
விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் பொறுப்பாளர் திருமதி. ரமாதேவி தலைமையேற்று பேசுகையில், "தமிழ்நாடு ஆன்மீக பூமியாக பல நூற்றாண்டுகளாக திகழ்ந்து வருகிறது, ஆன்மீகத்திற்கு எவ்வளவோ சவால்கள் விடுக்கப்பட்ட போதிலும், மக்கள் அவைகளை தொடர்ந்து முறியடித்து வருகிறார்கள். சுதந்திர போராட்டத்தில் தமிழகத்திலிருந்து எண்ணற்ற வீரர்களும், தேசியவாதிகளும் தோன்றியுள்ளார்கள். பாரதியாரின் சுதேசி மித்ரன் பத்திரிகை, மக்கள் மத்தியில் தேசிய எழுச்சியை பரப்பியது. அங்கொன்றும், இங்கொன்றுமாக சில விரும்பத்தகாத செயல்கள் நடந்தாலும், தேசிய நீரோட்டத்துடன் தமிழகம் என்றும் இணைந்தே இருக்கிறது.
தேசம் முழுவதும் ஹிந்துக்கள் மதநல்லிணக்கத்தோடு வாழ்கிறார்கள், பிற கலாச்சாரங்களையும் மதிக்கிறார்கள். நமது நாட்டில் பத்திரிகையாளர்களுக்கு கருத்து சுதந்திரம் நிறையவே இருக்கிறது, தேசத்தின் வளர்ச்சியில் ஊடகத்துறையின் பங்கு மிக முக்கியமானது. தவறுகளை சுட்டிக்காட்டுவது அவசியம் செய்ய வேண்டும், ஆனால் 'கருத்து சுதந்திரம்' என்கிற போர்வையில் எதிர்மறையான விஷயங்களை பொதுமக்களிடம் புகுத்துவதை பத்திரிகையாளர்கள் தவிர்க்க வேண்டும்" என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய சூரிய நாராயணன் நமது நாட்டின் கலாச்சாரத்திற்கு தமிழகம் எவ்வாறு வழிகாட்டியுள்ளது என்பது குறித்தும், ஹிந்துக்கள் மத்தியில் சகிப்புத்தன்மையானது இயல்பாகவே இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட பத்திரிக்கை, தொலைக்காட்சியிலிருந்து 35க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Tirunelveli
விஸ்வ ஸம்வாத் கேந்திரம், தென் தமிழகம் திருநெல்வேலி ஜில்லாவின் சார்பாக உலகின் முதல் பத்திரிக்கையாளரான ஸ்ரீ நாரதர் மகரிஷியின் ஜெயந்தி விழாவானது நெல்லை – பாளையம்கோட்டையில் உள்ள ஹோட்டல் பாலபாக்கியா ஹாலில் 31-08-2018 அன்று பகல் 10.30 மணி முதல் 12.30 மணி வரை இனிதாக நடைபெற்றது.
ஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் I.B.S , நிர்வாக இயக்குனர் All India Radio , திருநெல்வேலி, அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்கள் மற்றும் சக ப்ராந்த பிரசார் பிரமுக் ஸ்ரீ சூரியநாரயணன் ஜி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். நகர் பௌதிக் பிரமுக் ஸ்ரீ முருகன் ஜி அவர்கள் வரவேற்புரையும் ஜில்லா பிரசார் பிரமுக் ஸ்ரீ ராமசாமி ஜி அவர்கள் மகிழுரையும் வழங்கினார்கள்.ஸ்ரீ கோபாலகிருஷ்ணன் ஜி விழா நிகழ்சியை தொகுத்து வழங்கினார். கடவுள் வாழ்த்துப் பாடல் நகர் சாரீரிக் பிரமுக் ஸ்ரீ தங்க ராஜ் ஜி அவர்களால் பாடப்பெற்றது.
இவ்விழாவில் மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளார்களான ஸ்ரீவில்லிபுத்திரான் என்ற ஸ்ரீ சங்கர் ராமன் ஜி மற்றும் முத்தாலகுறிச்சி ஸ்ரீ காமராஜ் ஜி அவர்களுக்கு ஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் அவர்கள் பொன்னாடை போர்த்தி , நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.
ஸ்ரீ சுந்தர ஆவுடையப்பன் அவர்களின் முன்னுரை:
திரிலோக சஞ்சாரியான நாரதர் மிக எளிதில் எதிரிகளை சரணடைய செயக் கூடியவர். இதை தான் நாரத யுக்தி என்பர். நாம் செய்யக்கூடிய எந்தச் செயலிலும் ஆன்மிகம் கலந்து இருத்தல் வேண்டும் .ஆன்மிகம் கலந்தால் மட்டுமே சரியான பயணத்தை அடையமுடியும். ஒரு முறை நாரதரின் பூலோகம் பயணத்தில் முதலில் ஒரு அந்தணனை சந்திக்கிறார், அந்த அந்தணன் தனக்கு எப்போது மோட்சம் என்று கேட்கிறான். பின் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியை சந்திக்கிறார், அவனும் நாரதரிடம் தனக்கு எப்போது மோட்சம் என்று கேட்கிறான். இருவரிடமும் ஸ்ரீமன் நாராயணரிடம் கேட்டு வருவதாக கூறி வைகுண்டம் அடைந்தார். நாராயணரை கண்டு வணங்கி அந்த இருவரின் கோரிகையை தெரிவித்தார். பகவானோ சிரித்துகொண்டு அந்தணனுக்கு பல பிறவி உண்டு என்றும் செருப்பு தைபவனுக்கோ வைகுண்டம் உறுதி என்றும் சொல்லுமாறு கூறினார். நாரதற்கோ ஒரு ஆச்சரியம்.எதன் அடிப்படையில் இதை கூறுகிறேர்கள், எல்லாம் கற்ற அந்தணனுக்கு பல பிறவியா? என்று கேட்டார். அதற்கு பகவான் ‘அவர்கள் உன்னிடம் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று கேட்ப்பார்கள் அதற்க்கு நீ பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறி காரணத்தை அறிந்துகொள்வாயாக’ என்று விடை கொடுத்தார்.
நாரதர் முதலில் அந்தணரை சந்தித்தார், நாரதரிடம் ‘பகவான் என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்க அதற்க்கு நாரதர் ‘பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூற, அவன் நம்பிக்கையற்று எள்ளிநகைத்து நாரதரை பைத்தியம் என்று கூறினான். பின் செருப்பு தொழிலாளியை சந்தித்தார், அவன், நாரதரிடம் ‘பகவான் என்ன செய்து கொண்டிருக்கிறார்’ என்று கேட்க அதற்க்கு நாரதர் ‘பகவான் ஊசி முனைகாதில் யானையை நுழைத்துக் கொண்டிருக்கிறார்’ என்று கூற உடனே நாரதரை பார்த்து ‘பகவான் எதையும் செய்வார் ஏன் மலையைகூட நுழைப்பார், ஒரு சிறு விதைக்குள் பல ஆழ மரங்கள் வைத்ததைப்போல’ என்று நம்பிக்கையுடன் பூரிப்புகொண்டான். செருப்பு தைக்கும் தொழிலாளிக்கு வைகுண்டம் எதற்கு என்று நாரதர்க்கு விடை கிடைத்தது.நம்பிக்கைதான் வாழ்க்கை, பக்தி என்பது நம்பிக்கை மூடநம்பிக்கை அல்ல.
ஸ்ரீ சூரியநாராயணன் அவர்களின் சிறப்புரை:
இந்த பிரபஞ்சத்தின் முதல் பத்திரிக்கையாளர் நாரதர் ஆவார்.நாரத ஸ்மிருதி என்ற சமஸ்கிரத நூல் நாரதரைப் பற்றி குறிப்பிடுகிறது. 2400 ஆண்டுக்கு முன்னால் உள்ள இந்த நூல் தற்போது ஜெர்மனி வசம் ஆய்வுக்காக உள்ளன.ஒரு செய்தியை துல்லியமாகவும், நேர்மையாகவும், உண்மைத்தன்மை மாறாமல் தருவதால் நாரதர் போற்றப்படுகிறார் என்று அமெரிக்க பேராசிரியர் ஸ்ரீ ரிச்சர்ட் லோரிவியர் குறிப்பிடுகிறார். புதுகோட்டை மாவட்டத்தில் நாரத மலை என்ற மலை உள்ளது, விராலி மலையில் நாரதர்க்கு தனி சன்னதி உள்ளது. பத்திர்ககையாளர்கள் வாசிப்பு பழக்கத்தை அதிகரித்துக் கொண்டு துல்லியமான தகவல்களை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
மறைந்த பாரத முன்னால் ஜனாதிபதி அப்துல்கலாமின் வாழ்க்கையில் ஒரு சம்பவம். இஸ்ரேலில் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்குப் பின்னால் பயங்கரவாததிகளின் தாக்குதலில் வேடிவிபத்து ஏற்பட்டது .மறுநாள் காலை அவர்களின் நாளிதழில் இந்த நிகழ்வை கடைசி பக்கத்தில் துணுக்கு செய்தியாக வெளியிட்டு அவர்கள் நாட்டின் விவசாயி பயிரிட்டு கண்டுபிடித்த மிகப்பெரிய பூசணிக்காயாயின் அதிசியத்தை வெளியிட்ததைக் கண்டு பெருமை கொண்டதாக கூறி உள்ளார். எந்தத் செய்தி முக்கியத்துவம் தரவேண்டும் என்று பத்திரிகையாளர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
அனால் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டால் தான் அநேக வாசகர்கள் படிப்பார்கள் என்ற தவறான கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். வெறும் 560 வெளிநாட்டுவாழ் பெண்களிடம் தகவல் பெற்று பெண்களுக்கு பாதுகாப்பு அற்ற நாடுகளில் முதல் இடத்தில் பாரதம் இருப்பதாக தவறான அறிக்கையை வெளியிடுகின்றனர்.இதை தவிர்க்க வேண்டும். நமது நாட்டிற்கு பெருமை தரக்கூடிய ஏராளமான விசயங்கள் இருகின்றன. பஞ்சாங்கம் கூட நமது பாரத்தின் பெரும் தரும் விஷயம் ஆகும். இன்னும் 50 வருடங்களுக்கு அம்மாவாசை எப்பொழுது வரும் என்று நம்மால் துல்லியமாக கூற முடியும். எப்போதும் நேர்மறையான விசயங்களையே வெளிபடுத்த வேண்டும்.
ஸ்ரீ கிருஷண முத்துசாமி அவர்களின் சிறப்புரை:
பாரத போர் முடிந்து பாண்டவ மன்னன் தருமன் ஸ்ரீ கிருஷ்ணபகவானின் உத்தரவின் படி ராஜசூய யாகம் நடத்துகிறான். அதன் பொருட்டு நாரதரிடம் ஆசிவாதம் கேட்கிறான் அதற்க்கு நாரதர் அவனிடம் மூன்று கேள்விகள் கேட்கிறார்.
முதல் கேள்வியானது, ‘உனது நாட்டில் மழை பொழிந்து வரும் நீரை சேமிக்க என்ன செய்திருக்கிறாய்?’ தருமனின் பதில் ‘நாடு முழுவதும் குளம், வாய்கால், சேமிப்பு கிணறு வெட்டப்பட்டுள்ளன’ என்றான். இரண்டாவது கேள்வி ‘விவசாயத்திற்கு தேவையான விதை தானியங்கள் உன்நாட்டில் இருப்பு வைகப்பட்டுள்ளனவா?’
தருமனின் பதில் ‘விவசாயத்தின் இழப்பை தவிர்க்க என்னிடத்தில் தானியங்கள் இருப்பு உள்ளன’ மூன்றாவது கேள்வி ‘விவசாய உற்பத்தியாளர்க்கும் அதன் பயனிட்டாளர்க்கும் இடியே இடைதரகர் என்ன இலாபம் சம்பாதிகிறார்கள்? தருமனின் பதில் ‘இலாபமானது விவசாயிக்கும் பயனாளிக்கும் சரிசமமாக பிரிக்கப்படுகின்றன’ என்றான். இதை கேட்டதும் உன்நாடு செழிக்கும் உனக்கு எனது ஆசிர்வாதம் என்றர்? ஒரு நாடு செழிக்கவேண்டும் என்றால் அதன் விவசாயம், கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும். இதை பத்திர்க்கையளர்கள் உணர வேண்டும்.
கிழக்கு இந்திய கம்பெனியை நமது நாட்டின் சந்தீப் படேல் என்ற தொழிலதிபர் விலைக்கு வாங்கிவிட்டார். நமது நாட்டை அடிமைபடுத்திய ஆங்கில நிறுவனத்தையே நாம் விலைக்கு வாங்குவது எவ்வளவு பெருமை.ஒரே ஒரு பத்திரிக்கை தவிர மற்ற அனைத்து பத்திரிக்கைகளும் இதன் செய்தியை தவிர்த்தன.
கடந்த காலங்களில் கோயில் திருவிழாக்களையொட்டி நடைபெறும் தெருக் கூத்துகளில் நடைபெற்ற பாஞ்சாலி சபதம் காட்சிகளில் நடித்த கலைஞர் கூட,முந்தைய நாளில் கோயிலுக்கு சென்று அம்மனிடம், எனது தொழிலுக்காக நான் ஒரு பெண்ணின் சேலையை உருவும் காட்சியில் நடிக்கப்போகிறேன். என்னை மன்னித்து அருளவேண்டும் என்று கூறி மடியில் அக்னியை கட்டிக்கொண்டு மன்றாடிய பாரம்பயத்தில் வந்தவர்கள் நாம். உலகின் முதல் ஊடகவியலாளர் நாரதர். உலகின் நன்மைக்காக நல்ல செய்தியை அனைவரிடமும் கொண்டு சேர்த்தவர் நாரதர். அவரைப் போலவே பத்திரிக்கையளர்கள் நாட்டில் அறம் சார்ந்த செய்திகளை சமூகத்திற்கு முன்னிலை படுத்தி வழங்க வேண்டும். நம்முடைய ஜனநாயகத்தை தாங்கியிருக்கின்ற மூன்று துறைகளை கண்காணித்து சரியாச் செயல்படுகிறதா என்று கடிவாளம் போட்டு இழுத்து பிடிக்க கூடிய நான்காவது துறை ஊடகத்துறை. அனால் துருதிஷ்டவசமாக இந்த நான்கு தூண்களும் கொஞ்சம் கொஞ்சமாக செல்லரித்துக் கொண்டு வருகிறது. அதிகார மற்றும் அரசியல் துறையில் ஊழல் இருப்பதை நாம் அறிகிறோம்.நீதி துறையில் நீதி வாங்கப்படுகிறதா அல்லது வழங்கப்படுகிறதா என்பது இன்று ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. ஊடகத்துறையும் இவைகள் போல் ஆகிவிடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.ஒருகாலத்தில் பத்திரிக்கை துறை சுதந்திர போராட கருவியாக இருந்தது.திலகர் மற்றும் பாரதியார் போன்றோர் மக்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று பத்திரிகைகளை துவங்கி குடும்பத்தை இழந்து சிறையில் வாடினர். இன்று 1990 க்குப் பிறகு உலகமையமாக்களால் பத்திரிகை தொழில் துறையாக மாறிவருகிறது. நம்முடைய வாழ்க்கை கலாசாரம், அறம், தர்மம் சார்ந்த வாழ்க்கையாக இருந்தது.அதுவரை சமுதாயம் நன்றாக இருந்தது .அனால் இன்று பொருளாதாரம் சார்ந்த வாழ்க்கையாக மாறிவிட்டது. இதற்க்கு காரணம் நம்முடைய ஆங்கில கல்வியின் தாக்கமே ஆகும். இந்நிலையில் நாடுமுழுவதும் உள்ள யதார்த்த உண்மை நிலையை விளக்குவதே விஸ்வ ஸம்வாத் கேந்திரத்தின் தேச பணியாகும்.அதன் தொடக்கமே இந்த ஸ்ரீ நாரத ஜெயந்தி ஆகும்
0 Comments