RSS Press Note on blatant lie propagated by Congress President on Reservation grant

Congress party and its president Rahul Gandhi continue to try and misguide the society with their lies and deceit. The official FB page of Rahul Gandhi has shared a blatant lie in the name of Sarsanghchalak Shri. Mohanji Bhagwat and me in that he has claimed that RSS intends to end the reservations granted to the SC/ST communities by the Indian constitution. These allegations are a white lie and absolutely baseless. Rahul Gandhi, if he has some honesty should furnish authentic references or source for his claims.
The constitutional provisions of reservations for the Scheduled Castes/Tribes are because of the social inequalities that unfortunately exist in the Hindu society. It has been the official stand of RSS that these reservations should continue. The Akhil Bharatiya Pratinidhi Sabha has reiterated this from time to time through its resolutions.
The RSS is committed and engaged in creating an egalitarian and harmonious society in the country that is free from social inequalities. Rahul Gandhi and Congress party's campaign is a political swindle based on lies and falsehood. I strongly condemn this heinous and unwelcome conduct.
Dr.Manmohan Vaidya
Sah Sarkaryavah
Rashtriya Swayamsevak Sangh

காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர் ராஹுல் காந்தி அவர்களும்
தொடர்ந்து பொய்யுரைகளைப் பரப்பி, சமுதாயத்தைத் திசைதிருப்பும்
போக்கைக் கையாண்டு வருகிறார்கள். இப்போது அவர்களது முகநூல்
பக்கங்கள் பெரும்பாலானவற்றில் எனது மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்
மோஹன்ராவ் பாகவத் அவர்களின் பெயரில், எங்கள் கருத்தாக ஒரு
பொய்யைப் பரப்பி வருகிறார்கள். அதாவது தாழ்த்தப்பட்ட மற்றும்
பழங்குடியினருக்கு அரசியலமைப்புச் சட்டம் அளித்திருக்கும் இட
ஒதுக்கீட்டை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் முடிவுக்குக் கொண்டுவர
விரும்புகிறது என்பது தான் அந்தப் பொய். இது முற்றிலும்
ஆதாரமில்லாத அண்டப்புளுகு. இந்தக் கூற்றுக்கு ராஹுல் காந்தி
அவர்கள் ஏதாகிலும் சான்று அளிப்பார் என்றால் அது தான் நியாயமானது,
நேர்மை நிறைந்த செயல்பாடு.
இந்து சமுதாயத்தில் நிலவிவரும் வேற்றுமைகள் காரணமாகவே
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு அரசியலமைப்புச் சட்டம் இட
ஒதுக்கீடு வழங்கியிருக்கிறது, இது தொடர வேண்டும் என்பது தான்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நிலைப்பாடாக தொடர்ந்து இருந்து
வருகிறது; மேலும் சங்கத்தின் அகில பாரத பிரதிநிதி சபையும்
அவ்வப்போது நிறைவேற்றும் தீர்மானங்கள் வாயிலாக இதை
நிலைநிறுத்தியும் வந்திருக்கிறது. சமுதாயத்திலிருந்து முற்றிலுமாக
ஏற்றத்தாழ்வுகள் மறைந்து, சமநிலை ஏற்படுத்துவதில் சங்கம்
முனைப்போடு இருக்கிறது, அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு
வருகிறது. ராஹுல் காந்தி அவர்களும், அவரது காங்கிரஸ் கட்சியும்
பொய்கள் பரப்பிப் புரிந்துவரும் கீழ்த்தரமான அரசியலை நாங்கள்
கடுமையாக கண்டிக்கிறோம்.
மன்மோஹன் வைத்யா
துணை செயலாளர்
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்.

Post a Comment

0 Comments