Shraddhanjali message of RSS Sarsanghachalak Shri Mohan Bhagwat and Sarkaryavah Shri Suresh Joshi



இரங்கல் செய்தி
ராஷ்ட்ரிய ஸ்யவம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக் டாக்டர் மோகன் பாகவத் அவர்களும், சங்கத்தின் சர்கார்யவாஹ் ஸ்ரீ சுரேஷ் ஜோஷி அவர்களும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
ஸ்ரத்தாஞ்சலி
காஞ்சி காமகோடி பீடம் பூஜீய ஜகத்குரு சங்கராச்சாரியர் ஸ்ரீ ஜெயேந்திர ஸரஸ்வதி சுவாமிகள் அறிவாற்றலும், செயல்திறனும் நிறைந்த வாழ்வு வாழ்ந்து சிவனடி சேர்ந்துள்ளார்.   
ஹிந்து சமுதாயத்தில் ஏதோ காரணத்தால் ஏற்பட்ட தீய பழக்கங்களை களைந்து ஆதி சங்கரரின் பாரம்பரியத்தை அடியொற்றி,  பலவீனப் பிரிவினரின் மேம்பாட்டுற்க்காகவே  பல்வேறு தொண்டுகளில் தமது அலாதி ஆற்றலையும் அற்புதமான சங்கல்ப சக்தியையும் வாழ் நாளெல்லாம் ஈடுபடுத்தினார். நமது அனாதியான வேத தத்துவம், வேத கலாச்சாரம் ஆகியவற்றை இன்றைய காலகட்டத்திற்கு இசைவாக  நிறுவியதுடன் ஹிந்து சமுத்தாயம் முழுவதையும் எந்த விதத்தில் பார்த்தாலும் மாசில்லாததாக, சக்திசாலியாக கட்டம்மைக்க அவர் வெற்றிகரமான முயற்சிகள் மேற்கொண்டார்.  இன்று அவர் சரீரரீதியாக நம்மிடையே இல்லை என்றாலும் அவரது ஊக்கமூட்டும் நினைவு ஹிந்து சமுதாயம் முழுவதற்கும் என்றும் சக்தி தந்து வரும்.
சங்கராச்சார்ய மரபில் வந்த அந்த பேரொளி பரம்பொருளில் லயம் பெற்றதையடுத்து ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கத்தின் சார்பில் எங்கள் பணிவான ஸ்ரத்தாஞ்சலி சமர்ப்பிக்கிறோம்.


Poojaneeya Sarsanghchalak Sri Mohan Baghwat and Sarkaryavah Sri Suresh (Bhaiyya) Joshi's Shraddhanjali

Kanchi Kamakoti Peetam's Poojaneeya Jagadguru Shankaracharya Jayendra Saraswathi Maharaj lived a glorious and inspiring life. His soul has attained the lotus feet of Lord Shiva. Following the tradition set by the first Shankaracharya, he devoted his entire life, all his abilities and his spiritual powers to redress the shortcomings that crept into the Hindu society as well as for the development of weaker sections of the society.
His elegant presentations of Sanatan Vedic philosophy and Vedic culture were extremely successful in making the Hindu society flawless and strong. Though he has left for the heavenly abode, his inspirational memories shall continue to live and guide entire Hindu society.
Rashtreeya Swayamsevak Sangh submits its humble tribute to the divine soul that has merged into the great Shankaracharya tradition. 

 



Post a Comment

0 Comments