Unite Hindus, RSS Sarkaryavah at Hastinapur, Chennai



 RSS All India General Secretary Shri Suresh Bhaiya ji Joshi, today (15 Jan 2018) participated in Pongal Vizhaa organized by Desamuthu Mariyamman Temple premises at Hasthinapuram, Chennai. He took part in the Gau Pooja in the temple, delivered key note address and distributed prizes to winners of various competitions.
Speaking on the occasion, Shri Suresh ji wished that "Lives of people should become more prosperous and their life shine as bright as the Sun. He called for unity among all Hindus. He stressed that people should forget all differences, including that of Caste and Language . He emphasized that we must remove hatred, if any against others and consider all of us as  one family and children of Bharat Mata"
 He added that, "Hindus can gain strength only if we remain united. This strength should be put to use to help the needy, protect our dharma and uplift our Nation.



இன்று (15 ஜனவரி 2018), சென்னை ஹஸ்தினாபுரம் வினோபாஜி நகரில் அமைந்துள்ள தேசமுத்து மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவில், ஆர்.எஸ்.எஸ். அகில இந்திய பொதுச்செயலாளர் திரு சுரேஷ் பையா ஜி ஜோஷி கலந்துக்கொண்டு, கோ பூஜையில் பங்கேற்றத்துடன் பொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

 அவர் பேசுகையில் "பொங்கல் பண்டிகை என்பது உத்தரயாணத்தின் துவக்க நாள், சூரியனின் ஒளி அதிகமாக பிரகாசிக்க துவங்கும். அதே போல நமது வாழ்க்கையிலும் இன்னும் அதிக பிரகாசம் தோன்றும். ஹிந்துக்கள் அனைவரும் சாதி, மொழி உள்ளிட்ட எந்த வேறுபாடும் பாராது, நாம் அனைவரும் பாரத அன்னையின் புதல்வர்கள் என்கிற எண்ணத்துடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். பிறர் மீது ஏதேனும் கோபம், வெறுப்பு ஆகியவைகள் இருந்தால் அவற்றையெல்லாம் மறந்து அனைவரையும் அனைத்து செல்ல வேண்டும். ஹிந்துக்களுக்குள் ஒற்றுமை ஓங்கினால் மட்டுமே நாம் வலிமையுள்ள சமுதாயமாக இருக்க வேண்டும். இந்த வலிமையானது, வலிமையில்லாதோரை தாக்குவதற்கு அல்ல, அவர்களை காப்பதற்காக என்பதை நாம் உணர வேண்டும்.  நமது தர்மத்தை காக்கவும்  தேசத்தை முன்னேற்றவும் இந்த ஒற்றுமை அவசியம்".
 

Post a Comment

0 Comments