RSS demands 'apology' on 'Andal controversy'


RSS feels sad that in the land where Valluvar, Kambar, Avvaiyar, Alwars, Nayanmaars lived and showed the bhakthi movement witnesses a ‘Andal controversy’ today. It is shocking that where nationalist people who contributed to Dinamani and the popular lyricist are hurting the sentiments of Hindus. Saying just ‘Sorry’ will not suffice the bhakts. Many spiritual organizations and Hindu movements have been brought to the streets today which also led Manavaala Jeyar Swamiji to sit on an indefinite fast till they apologize. RSS appeals to respect the feelings of crores of Hindus and tender apology. This is the demand of spiritual leaders, political leaders and millions of people worldwide. It is proven that society rises when needed and appeals to serve Hindu society unitedly.

பத்திரிக்கை செய்தி

தெய்வ மணம் வீசும் தமிழகத்தில்வள்ளுவனைத் தந்து வான் புகழ் கொண்டதமிழகத்தில்கம்பரும் ஔவையும்நாயன்மார்களும் ஆழ்வார்களும் வாழ்ந்ததமிழகத்தில்இன்று ஆண்டாள் பற்றிய சர்ச்சை கிளம்பியிருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும்.
      சிவராமன் போன்ற தேசிய சிந்தனை கொண்டவர்கள் எந்த பத்திரிக்கைக்குஆசிரியர்களாகதிகழந்தனரோ அந்த பாரம்பரியம் மிக்க தினமணி பத்திரிக்கையின்ஆசிரியா் திரு.வைத்தியநாதன் அவர்களும், ஜன்மம் நிறைந்தது சென்றவர் வாழ்கசிந்தை கலங்கிட வந்தவர்வாழ்க என்ற அற்புதமான வாழ்க்கைத் தத்துவப் பாடலை எழுதிய திரு.வைரமுத்துஅவர்களும் ஆண்டாள் நாச்சியாரின் பெயருக்கு கலங்கம் ஏற்படகாரணமாகிவிட்டனரே என்பது அதிர்ச்சி அளிக்கிறதுகுறிப்பாக திருப்பாவைப்பாடல்களை பாடி வரும் மார்கழியில்ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில்தெய்வ மாதா புகழுக்கு மாசு ஏற்படுத்துவதும்அதை பெருமையாக பத்திரிக்கையில் பிரசுரிப்பதும் மிகவும்   கண்டனத்துக்குரியதாகும்.
      “யாருடைய மனமாவது இதனால் வருத்தமடைந்திருந்தால் வருத்தமடைகிறேன்என பட்டும் படமால் பேசுபவர்கள்ஆண்டாளை அவதூராக பேசியதனால் கோடானுகோடி ஹிந்துக்களின் மனது புண்பட்டிருக்கிறது என்பதை உணர வேண்டும்.
      பல ஆன்மீக அமைப்புகளும் ஹிந்து இயக்கங்களும் இன்று தெருவிற்குஇழுக்கப்பட்டுள்ளனஇவர்கள் மன்னிப்பு கேட்கும் வரை ஜீயர் சுவாமிகள்உண்ணாவிரதம் மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டு விட்டது.
தமிழகத்தின் மாண்பினை காக்க வேண்டி சம்பந்தப்பட்டவர்கள்தரம் தாழ்த்தி பேசியகருத்துக்களை மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்கவேண்டும்இதுவே ஆன்மீகபெரியவர்கள்அரசியல் தலைவர்கள் மற்றும் உலகம் தழுவிய கோடிக்கணக்கானபக்தர்களின் கோரிக்கை ஆகும்.   
     நாத்திகத்தையும் ஜீரணிக்க வல்ல ஹிந்து சமுதாயம் இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள்எழுச்சி தரும் என்று எண்ணி ஆக்கப்பூர்வமான ஒற்றுமைப் பணியில் ஈடுபடவேண்டுகிறோம்.  
            ஓங்குக தமிழ் புகழ்வாழ்க தெய்வீகம்!!,  வளர்க தேசியம்.!!
  
தாயகப் பணியில்


கு குமாரசுவாமி  மற்றும் மாரிமுத்து
தமிழ்நாடு (வட மற்றும் தென்) தலைவர்கள்  

Post a Comment

0 Comments