62nd ABVP National Conference held at Indore



62nd ABVP National conference held at Indore, Madhya Pradesh recently. 8000 vidyarthis from various parts of the country participated. Resolutions on education, national issues and social harmony were passed. Shri Nagesh Thakur is elected as National President and Shri Vinay Bidre as National Secretary for the year 2016-17. 



62வது தேசிய மாநாடு

24 – 27, டிசம்பர், 2016 இந்தூர், மத்திய பிரதேஷ்

ABVPன் 62வது தேசிய மாநாடு மத்திய பிரதேஷ் இந்தூரில் டிசம்பர் 24 முத்ல் 27 2016 வரை நடைபெற்றது.8000 மாணவர்கள் 1500 மாணவிகள் 500 ஆசிரியரிகள் என 10,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒரு சிறிய பாரதத்தை காண முடிந்த்து.

இந்தூர் கிளை சார்பாக 50 மாணவிகள் உட்பட 500 மாணவர்க்ள் மூன்று மாதங்களாக மாநாட்டுப்பணியில் ஈடுபாட்டுடன் பங்குபெற்றார்கள். கடும் குளிரிலும் இதமாக வரவேற்று ஏற்பாட்டினை குறைவில்லாது செய்திருந்தனர். 5 கல்லூரிகளில் அனைவருக்கும் தங்கும் வசதிகள் செய்துதரபட்டிருந்தது.

தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து 122 மாணவர்கள் 14 மாணவிகள் ஆசிரியரிகள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் என 147 நபர்கள் கலந்துக்கொண்டனர்.

23ஆம் தேதி அன்று நடைபெற்ற தேசிய செயற்குழுவில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட்து. புதிய கல்வித்திட்டம் உடனே தகுந்த திருத்தங்களுடன் அமல்படுத்தப்படவேண்டும் என்றும் பெண் பாதுகாப்பிற்கான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

மாநாட்டு நகரத்திற்கு டாக்டர். பீமா ராவ் அம்பேத்கரின் பெயர் சூட்டப்பட்டது. 24ஆம் தேதி கொடியேற்றம் மற்றும் வந்தேமாதரத்துடன் மாநாடு இனிதே துவங்கியது. பாரத் மாதா கீ ஜெய் மற்றும் வந்தேமாதரம் கோஷம் இந்தூர் நகரையே அதிரச்செய்தது. துவக்க நிகழ்ச்சி திரு. மனோஹர் பரிகர், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் கலந்துகொண்டார். யஷ்வந்த் ராவ் யுவா விருது மணிப்பூரைச்சேர்ந்த திரு. ஆர் கே விச்வஜித் சிங் அவர்களுக்கு போதை பழக்கத்திலிருந்து இளைஞர்களை மீட்பதற்காக வழங்கப்பட்ட்து.

கல்வி தீர்மானம் – மாணவர் சேர்க்கை, கல்லூரியின் எண்ணிக்கை, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், Semester முறையின் குறைபாடு, பற்றியும்

தேசிய சூழ்நிலை தீர்மானம் – இராணுவத்தின் தீரமான முயற்சிகளும் மத்திய அரசின் பணமில்லா பரிவர்த்தனத்திறகான முயற்சிகள் வரவேற்று, கல்வி நிறுவன்ங்களில் தேச விரோத கோஷங்கள், மே. வங்க அரசின் தாஜா செய்யும் போக்கினை கண்டித்து, குழந்தைகள் கடத்தபடுவதை குறித்தும், எல்லையில் போதை பரிமாற்றம் குறித்தும்

சமுதாய நல்லிணக்கத்திற்கான தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.

2 ½ கி.மீ. நீண்டு நின்ற ஊர்வலம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. அவரவர் மாநிலத்தின் பாரம்பர்ய உடையில் ஊர்வலத்தில் கலந்துக்கொண்டனர்.

2016 – 17 ஆண்டிற்கான செயற்குழு அறிவிக்கப்பட்டது. திரு நாகேஷ் டாகூர் தேசியத்தலைவராகவும் திரு. வினய் பித்ரே தேசிய பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

22வது தமிழ்நாட்டின் மாநில மாநாடு நடைப்பெற்று செயற்குழு அறிவிக்கப்பட்டது. திரு நாகலிங்கம் மாநில தலைவராகவும் திரு காளீஸ்வரன் மாநில செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திரு. சிவராஜ் சிங் சௌஹான் – முதல்வர் - ம.பி, ஸ்ரீமதி. சுமித்ரா மஹாஜன், நாடாளுமன்ற உறுப்பினர், இந்தூர், திரு. சுரேஷ் ஜீ சோனி, அகில பாரத இனண் பொதுச் செயலாளர் ஆர். எஸ். எஸ், திரு. தத்தாத்ரே ஹொஸபாலே, அகில பாரத இனண் பொதுச் செயலாளர் ஆர். எஸ். எஸ், திரு. பி. சுரேந்திரன், அகில பாரத இணை அமைப்புச்செயலாளர், பி எம் எஸ், நேபாள் சார்ந்த கம்யூனிஸ காங்கிரஸ் தலைவர்கள், பல நாடுகளைச்சார்ந்த மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாநாட்டினை சிறப்பித்தனர்.

Post a Comment

0 Comments