ஆச்சர்யர் அபினவ்குப்தா அவர்களின் புத்தாயிரத்தையொட்டி -
ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்
நமது
காஷ்மீரில் ஏராளமான சிந்தனையாளர்களும், ஆன்மீகவாதிகளும் தோன்றியுள்ளனர். தங்களது தவம்,
ஞானம்
ஆகியவைகளின் மூலம்
இந்த
உலகிற்கு பல
அரிய
பொக்கிஷங்களை அருளியுள்ளனர். பல
மதங்களும், சம்பிரதாயங்களும் தழைத்து வரும்
காஷ்மீரில், நமது
பாரம்பரியங்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன.
காஷ்மீரில் தோன்றியவர்களுள் ஆச்சார்யர் அபினவ்
குப்தா
முக்கியமான ஒருவர்.
சைவ
சித்தாந்தத்தின் மிக
உயரிய
இடத்திலிருப்பவர். அத்வைத
ஆகமங்கள், ப்ரத்யபிக்ய தரிசனம் மட்டுமல்லாது பல
வழிமுறைகளில் அதீத
ஞானம்
படைத்தவராக இருந்தார். நமது
நாட்டில் தழைத்த
பல
ஆன்மீகவாதிகள் மற்றும் தவசீலர்களின் குணாதிசயங்களும், ஆச்சார்யர் அபினவ்
குப்தாவிடம் ஒன்றிணைந்து இருந்தது.
பல்வேறு சித்தாந்தவாதிகள், அவரை
தங்களது குருவாக ஏற்றுகொண்டுள்ளனர். ஆச்சார்யர் அபினவ்
குப்தா
தனது
பிரதான
குருவான லக்ஷ்மனகுப்தாவிடம் ப்ரத்யபிக்ய சாஸ்திரமும், மேலும்
19 அச்ச்சர்யகளிடம் பல
துறைகளிலும் பயிற்சி பெற்றார்.
தான்
பெற்ற
அறிவை
பல
நூல்கள் மூலம்
இந்த
உலகுக்கு பகிரந்தளித்தார். நூறு
கைகளால் பெற்று
ஆயிரம்
கைகளால் தானம்
செய்
என்னும் சொல்லுக்கு இவர்
ஒரு
இலக்கணம். சைவ சித்தாந்தத்தை பற்றி
இவர்
விரிவாக எழுதியுள்ளார். தன்த்ரலோக், பரத்ரின்ஷிகா விவரன்,
பரமர்த்ஸார், தந்த்ராசர், கீதார்த்தசங்க்ரஹ, நாட்டிய சாஸ்திரம், தியானலோகம் போன்றவை அவரின்
மிக
சிறந்த
படைப்புகள்.
ஒலி
என்பது
நான்காவது பரிமாணம் என்று
அவர்
வலியுறுத்தினார். கிருஷ்ணனின் வடிவில் சிவனை
காண்பது அவர் ஏற்றுக்கொண்டார். பாண்டவ
- கௌரவ
யுத்தம் ஞானத்திற்க்கும் அஞானத்திற்க்கும் இடையில் ஏற்பட்ட போராக
அவர்
காண்கிறார்.
தனது
இறுதி
நாட்களில் அவர்
வேத
மந்திரங்களிலும் தேர்ச்சிப்பெற்றவராக இருந்தார். 70 வயதிற்கு மேல்,
தனது
சீடர்களுடன் பைரவ
குகையில் சித்தியடைந்தார்.
இவ்வாறு நமது
நாட்டின் ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தை போற்றி
வளர்த்த ஆச்சார்யர் அபினவ்
குப்தாவின் செய்திகளை இந்த
உலகிற்கு எடுத்து சொல்வதே, நாம்
அவருக்கு செய்யும் மரியாதையாக அமையும். சித்தாந்த வெறியுடன் சிலர்
இருக்கும் இக்காலக்கட்டத்தில், இது
மிக
முக்கியம் குறிப்பாக காஷ்மீரில் உள்ள
இளைஞர்கள் இதை செய்தால் மிக சிறப்பாக அமையும்
0 Comments