Shri Ramagopalan speech at Hindu Munnani Conference




மாநாட்டில் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராமகோபாலன் பேசியதாவது:– இந்த மாநாட்டுக்கு இளைஞர்கள் அதிக அளவில் திரண்டு வந்துள்ளதை பார்க்கும் போது உற்சாகம் ஏற்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்து இளைஞர்கள் ஏராளமானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உள்னர். அதை அரசு தடுக்க வேண்டும். அவர்கள் வீரமரணம் அடைந்து உள்ளதாகவே நான் கருதுகிறேன். நாம் ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றை பெற முடியும். இறந்து போன வீர இளைஞர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று நான் ஆறுதல் கூறி வந்து உள்ளேன். அப்போது துக்கம் ஏற்பட்டாலும் இந்துக்களை காப்பதற்காகவே அவர்கள் உயிர்த்தியாகம் செய்து உள்ளதாக கருதுகிறேன். இந்து இளைஞர்கள் கொலைகள் தடுத்து நிறுத்துவோம். எனக்கு வயது ஆகிறது. என் மீது கூட ஒரு முறை தாக்குதல் நடத்த முயற்சித்தனர். ஆனால் நான் அஞ்சாதவன். என்னை அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. வாழ்வோம், வெற்றி பெறுவோம். வாழவைப்போம்.இந்துக்களை மதம் மாற்ற வைக்க சிலர் முயற்சித்து வருகிறார்கள். அவர்களது முயற்சிகளை தடுக்க வேண்டும். தமிழகத்தில் 43 ஆயிரம் கோவில்கள் உள்ளன. சுமார் 6 லட்சம் ஹெக்டர் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்கள் உள்ளன. நம் முன்னோர்கள் கோவில்களுக்கு தானமாக கொடுத்து உள்ளனர். இருந்தாலும் கோவில்களில் நாம் கட்டணம் செலுத்தி தரிசனம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம்.கோவில் கட்டண முறை தரிசனத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். இந்துக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் மற்ற மதத்தினருக்கு சென்று விடுகிறது. இந்துக்களின் உரிமைகளையும், நிலங்களையும் மீட்டெடுக்க பாடுபடுவர்களுக்கே வாக்களிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Post a Comment

0 Comments