பெண்கள் கடத்தல் கும்பல்
முழுமையான விசாரணை செய்து,
குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
சமீபத்தில் திருச்சியில் ஒரு பெண்ணைக் கடத்தி வந்த கும்பலை காவல்துறை விரைந்து கைது செய்துள்ளது. அதில் ஆயிஷா என்ற பெண் உட்பட சிலர் கைது செய்யப்பட்டுள்னர். இக்கும்பலின் வலையில் வீழ்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மீதும் சட்டம் தனது கடமையை செய்ததுடன், அவர் கட்சியின் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் உடனடியாக நீக்கி முதல்வர் செல்வி ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இத்தனை விரைவாக செயல்பட காவல்துறையையும், தமிழக முதல்வரையும் இந்து முன்னணி பாராட்டுகிறது.
இந்த கும்பலின் சதி தொடர்ச்சியான ஒன்று என்றும், பெண்களை பங்களாதேஷ் வழியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்து வந்ததும், இவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ளதையும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பெண் கடத்தல், விபச்சார கும்பல் போன்ற தொடர் குற்றச் செயல் தமிழகத்தில் அதிகம் தெரியப்படாமல் இருந்தது. அதுவும் பெண்களுக்கு சினிமா, சின்னத்திரை ஆசை காட்டி கடத்தப்பட்டு,விற்கப்படுவது திட்டமிட்ட சதி செயல், இந்தக் குற்றங்களை சாதாரண குற்றவாளிகளால் மட்டும் செய்திருக்க முடியாது. இதற்கு பின்புலத்தில் பல அரசியல் செல்வாக்கு, பண பலம், அதிகார பலம் கொண்டவர்களின் கைகள் இருக்கலாம். அதுவும் நாடு விட்டு நாடு கடத்தி விற்பது பயங்கரவாதிகளின் துணையில்லாமல் நடப்பது இயலாத செயல்.
இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோரை முழுமையாக கண்டறிய,பிடிக்க, நிரூபிக்க சர்வதேச புலனாய்வுத் துறை(இன்டர்போல்) உதவியும், பல மாநிலத் தொடர்புகளை விசாரிக்க மத்திய புலானாய்வுத் துறையின் உதவியும் கொண்டு முழுமையாக விசாரணை செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமீபத்தில் குழந்தைகள் கடத்தல் அதகரித்து வருகிறது. தொலைந்த பல லட்சம் குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறது. குழந்தை கடத்தலை முழுமையாகத் தடுக்க அனைத்து பிரசவ மருத்துவமனைகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
மனித நேயமில்லாத இத்தகைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட்டால்தான்,குற்றம் செய்ய அச்சம் ஏற்படும். தமிழக முதல்வரும், காவல்துறையும் தேவையான நடவடிக்கையை எடுத்து குற்றவாளிகளை முழுமையாக சட்டத்தின் முன் நிறுத்தித் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தீ பிடிக்காத கூரை அமைக்கப்பட வேண்டும்..
திருப்பூர் வீர ராகவ பெருமாள் கோவில் திருப்பணி பல லட்சம் செலவில் தேர் வேலை செய்து வந்த இடத்தில் மேற்கூரை தென்னங்கீற்றால் இருந்துள்ளது.அது தீப்பற்றி நாசத்தை விளைவித்துள்ளது. பல லட்சம் மதிப்பிலான தேர் சிற்பங்கள் செய்த இடத்தில் அலுமினிய ஷிட்கூரை அமைக்காமல் இருந்தது கண்டிக்கத்தக்கது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கே இதற்குக் காரணம். இனி இதுபோன்று நடைபெறாமல் இருக்க கீற்றுக் கொட்டகைக்குப் பதிலா ஷீட் போட அரசு உத்திரவிடவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
தனியார் அலுவலகங்களிலோ, இடங்களிலோ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு சாதனங்கள் ஏன் வைக்கவில்லை என்று அக்கரையோடு நடவடிக்கை எடுத்து, உரிமையாளரை கைது செய்யும் அரசு, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டால் அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுப்பதும் இல்லை, எந்த அரசு அலுவலங்களிலும் தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதையும் அரசின் கவனத்திற்குத் தெரிவித்துக்கொள்கிறோம.்
தமிழக அரசும், அறநிலையத்துறையும் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
0 Comments