Sri Ramagopalan strongly condemns the recommendations of the Communist leader
Communist Leader D Pandian today met Chief Minister J Jayalalitha and submitted a memorandum requesting to give the right to property to the tenants and residents in the temple lands. Sri Ramagopalan, Founder Hindu Munnani has strongly condemned against the demand and said that no Government has the right on the temple properties which has been donated by the rulers and our ancestors to spread spiritualism.
2-4-2013
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
கோயில் சொத்திற்குப் பட்டா வழங்க கம்யூனிஸ்ட்கள் தலைவர்கள்
பரிந்துரைத்துள்ளதை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது.
இன்று தமிழக முதல்வரை கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் தலைமையில் ஒரு குழு சந்தித்து ஏழைகளுக்குப் பட்டா வழங்க வேண்டும், கோயில் நிலங்களில் வசிப்போருக்கு, குத்தகைதாரர்களுக்கும் அதனைச் சொந்தமாக்கிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
இதனை இந்து முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. கோயில் சொத்தை விற்கவோ, வாங்கவோ யாருக்கும் உரிமையில்லை. நமது முன்னோர்களும், அரசர்களும் நேரடியாக அந்தந்த கோயில் இறைவனின் பெயரில் சொத்துக்களை எழுதி வைத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கோயில் நிலைத்து இருந்து ஆன்மீகத்தைப் பரப்ப நமது முன்னோர்கள் செய்து வைத்த ஏற்பாடு இது. எனவே, ஆலய நிர்வாகத்தையும், ஆலயச் சொத்துக்களையும் பாதுகாப்பது மட்டுமே தமிழக அரசின் கீழ் செயல்படும் இந்து சமய அறநிலையத்துறையின் பங்கு. கோயில் சொத்தில் கைவைக்க யாருக்கும் உரிமையில்லை என்பதை இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.
சர்ச்களுக்கும், மசூதியினை சொத்தை பராமரிக்கும் வக்ஃப்போர்டுக்கும் பல கோடிக்கணக்கான சொத்துக்கள் இருக்கின்றன. அவற்றிலும் பல லட்சம் பேர் வாடகைக்குத் தலைமுறை தலைமுறையாக இருந்தும் வருகிறார்கள். அப்படியிருக்க அங்கெல்லாம் எழாத பட்டா கோரிக்கை இந்து கோயில்களில் ஏன் வைக்கப்படுகிறது? கோயிலை அழிக்க, பேராசையை வளர்க்கும் கம்யூனிஸ நயவஞ்சகத்தனமே இதற்குக் காரணம். அப்படியே கோரிக்கை வைப்பார்களேயானால் வக்ஃப்போர்டுக்குச் சொந்தமான சொத்தை யாருக்காவது பட்டா போட்டு தர அரசு உத்திரவிடுமா? அரசு நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கம்யூனிஸ்ட்களிடம் இன்று பல ஆயிரம் கோடிக்குச் சொத்துகள் கொட்டிக்கிடக்கின்றன. ஒவ்வொரு ஊரிலும் அதற்கு சொத்துக்கள் குவிக்கப்பட்டுள்ளன. அதனை எல்லாம் ஏழை பங்களனாகக் காட்டிக்கொள்ளும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் பிரித்து கொடுக்கட்டும். இன்று அந்தத் தலைவர்களோ பணக்கார தொழிலதிபர்களாக ஆகிவிட்டார்கள். எனவே இவர்களது இந்தக் கோரிக்கை தமிழக முதல்வர் மீது மக்களுக்கு வெறுப்பையும், விரோதத்தையும் ஏற்படுத்த நடக்கும் சதியாகவே தெரிகிறது.
`கோயில் சொத்து குல நாசம்' என்பது நாம் கண்கூடாக காணும் உண்மை. எனவே, தமிழக முதல்வர் கம்யூனிஸ நயவஞ்கர்களின் கோரிக்கையை புறந்தள்ள வேண்டும். கோயில் நிலங்கள், கட்டிடங்கள் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோயில் சொத்தை விற்று பணமாக வங்கியில் போட்டால் மாதாந்தோறும் வட்டியாக நல்ல லாபம் வரும் என்று பாசாங்கு செய்கிறார்கள் அதிகாரிகள். பணத்தின் மதிப்பு குறைந்துகொண்டே போகிறது, அதே சமயம் நிலங்களின் மதிப்போ வானத்தை தொடும் அளவிற்கு உயர்ந்துகொண்டே போகிறது என்பதை பக்தர்கள் உணர வேண்டும். எனவே பணமாக இருந்தால் அது காணாமல் கரைந்து போய்விடும். நிலமாக, கட்டிடமாக இருந்தால் மட்டுமே நிரந்தர வருமானம் கோயிலுக்குக் கிடைத்து வரும்.
எனவே, கோயில் சொத்துக்களை தாரைவார்க்கும் எந்த முடிவை யார் முன்வைத்தாலும், ஆதரித்தாலும் இந்து முன்னணி கடுமையாக எதிர்க்கும். மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களை நடத்தும். கோயில் சொத்தில் ஓர் அங்குலத்தையும் இழப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது.
தமிழக முதல்வர் அவர்கள் கோயில் நிலங்களுக்கு பட்டா வழங்கமாறு கம்யூனிஸ கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். கோயில் சொத்துக்கள் பாதுகாக்கவும், வளப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம ்கோயில்கள் நிரந்த வருமானம் பெறவும், கோயில்களில் வசூலிக்கும் கட்டணங்களை ரத்து செய்யவும் இந்து முன்ணி கேட்டுக்கொள்கிறது
1 Comments
Sri Ramagopalanji has echoed the sentiments of discerning Hindus. Commies are traitors and pseudo-secularists. They are also after votebanks. Hindus in every party must wake up to the hypocrisy of their 'secular' leaders, who have no shame to woo muslims and christians for the sake of their votes, but take Hindus for granted. Commies never do any charity, but they have no qualms about advocating the squandering of Hindu Temple funds and properties which were donated by ardent devotees to their beloved Deities. None has the right to misuse these. No politician has so far demanded that Church and Wakf properties, which are actually Govt lands, should be distributed among the landless people.Not even commies have the guts to demand it.
ReplyDelete