Hindu Munnani condoles for Sivakasi victims



ந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!
பட்டாசு வெடிவிபத்தில் இறந்தவர்கள் ஆன்மா நற்கதியடைய
இந்து முன்னணி பிரார்த்திக்கிறது.

நேற்று விருதுநகர் அருகே நடைபெற்ற பட்டாசு வெடிவிபத்தில் தீயில் கருகி 35 பேர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தமான செய்தி. இந்தத் தொழில் ஆபத்து நிறைந்தது என்றாலும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டியது அனைவரது பொறுப்பு. அப்படிச் செய்யப்படும் பாதுகாப்புச் சாதனங்களில், குறிப்பிட்ட காலத்தில் செயல்முறை பயிற்சி கொடுக்கப்பட வேண்டும்.
தீ பிடிக்கக்கூடிய பொருட்களில் பற்றிய நெருப்பை வேடிக்கைப் பார்க்க வந்த பலரும் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதுபோன்ற சோதனையான நேரத்தில் தீயணைப்புத் துறை, காவல்துறை அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு பொதுமக்கள் நடக்க வேண்டும். ஆபத்தை உணராமல் நெருப்பின் அருகில் சென்று வேடிக்கை பார்த்து உயிரை மாய்த்துக்கொண்டது சிறுபிள்ளைத்தனமானது.
தமிழகத்தில் பரவலாக தீ விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே தமிழக அரசு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
தீபாவளிக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், மக்கள் அதிகம் கூடும் பட்டாசுக்கடை, துணிக்கடை, மளிகைக் கடை முதலான பெரிய கடைகளிலும், முக்கிய நகரங்களிலும் கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும். சமுக விரோதச் செயலில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த விபத்தில் உயிரிழந்தோர் ஆன்மா நற்கதியடைய இந்து முன்னணி பிரார்த்திக்கிறது. அவர்களது பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.


Post a Comment

0 Comments