Hindu Munnani calls for a 'Social Harmony' during Ganesh Chathurthi celebrations

இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர்
இராம கோபாலன் அவர்களின் பத்திரிகை அறிக்கை!

கோலாகலமான விநாயகர் சதுர்த்தித் திருவிழா! இந்து சமுதாய ஒற்றுமை பெருவிழா!
கடந்த 30 வருடங்களாக விநாயகர் சதுர்த்தித் திருவிழாவினை இந்து எழுச்சி, ஒற்றுமை திருவிழாவாக சமுதாய விழாவாக இந்து முன்னணி நடத்தி வருகிறது. சமுதாயத்தில் ஏற்பட்டுள்ள ஜாதி, மொழி, அரசியல் உள்பட பல்வேறு பெயர்களில் ஏற்பட்டுள்ள பிரிவுகளைக் களைந்து இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த விழா தமிழகம் முழுவதும் மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது.
இவ்விழாவில் ஒவ்வொரு பேட்டையிலும் விநாயகர் திருமேனி வைத்து கூட்டாக வழிபாடு நடத்தி முடித்து, ஒன்றாக இணைந்து விசர்ஜன ஊர்வலத்தில் குடும்பத்தோடு கலந்துகொள்வதன்மூலம் சமுதாய ஏற்றத்தாழ்வு சரிசெய்யப்படுகிறது. இதில் தீண்டாமை ஒழிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
விநாயகர் சதுர்த்திப் பெருவிழாவிற்குப் பொதுமக்களிடையே மிகுந்த உற்சாகமும், உத்வேகமும் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 15000க்கும் மேற்பட்ட இடங்களில் இவ்விழாவானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவின் மையக்கருத்தாக எல்லோரும் சமமாக கோயில்களில் சுவாமியை வழிபடவேண்டும். இதற்காக கோயில்களில் வசூலிக்கப்படும் தரிசனக் கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும் என்பது வலியுறுத்தப்படும்.
சென்னையில் விசர்ஜன ஊர்வலமானது வருகின்ற 23-9-2012 ஞாயிறு மதியம் துவங்கி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் இந்து எழுச்சி விழாவாக நிறைவு பெறும். இதற்கான ஏற்பாடுகளை வட்டம், தொகுதி, மாவட்டம், மாநகரம் முதலான அனைத்துப் பொறுப்பாளர்களும் செவ்வனே செய்து வருகிறார்கள். விசர்ஜன ஊர்வலத்திலும் நிறைவு நிகழ்ச்சியிலும் பொதுமக்கள் குடும்பத்தோடு கலந்துகொள்ள இந்து முன்னணி அழைப்பு விடுக்கிறது.
இந்த விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெறவும், விசர்ஜன ஊர்வலம் நல்லமுறையில் நடைபெறவும் காவல்துறையும், தமிழக அரசும், தமிழக அரசு அதிகாரிகளும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம்.

A blood donation camp was conducted 'welcoming Ganesha' by SRI BALA VINAYAGAR CHATURTHI COMMITEE held on 16.9.2012 at Triplicane. Around 140 people donated blood.







Post a Comment

1 Comments

  1. That was great moment for us (sri bala vinayagar triplicane commite)

    ReplyDelete