Chennai - Sandesh (SETHU)


சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன ஆவணி 13 ( 2012, ஆகஸ்ட் 29 )

சென்னை 'சம்ஸ்க்ருத உத்சவ்' தில் ஆயிரகணக்காணோர் பங்கேற்ப்பு 

எல்லோரும் சமஸ்கிருதம் கற்கணும். குறைந்த பட்சம் பகவத் கீதையையாவது படிக்கணும்' என்று தனது விருப்பத்தை திரு சாலமன் பாப்பையா அவர்கள் வெளியிட்டுள்ளார். சம்ஸ்க்ருத பாரதியின் 'சம்ஸ்க்ருத உத்சவ்' சென்னையில் ஆகஸ்ட் 18, 19, 20, தேதிகளில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் தெரிவித்தார். சாலமன் பாப்பையா பிரபல தொலைக்காட்சிகளில் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகளை நடத்தி வருபவர். சுவாமி விவேகானந்தர் 150 வது பிறந்த விழாவை ஒட்டி விவேகானந்தர் கூறிய கதைகளை எளிய சம்ஸ்க்ருதத்தில் ஒரு புஸ்தகமாக வெளியிட்டுள்ளனர். 'சம்ஸ்க்ருத உத்சவ்' வின் முதல் நாளில் பால கலா உத்சவில் 3,500 பள்ளி மாணவ மாணவிகள் தங்களது திறமைகளை சம்ஸ்க்ருதத்தில் வெளி காட்டினர். இரண்டாம் நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் கவி அரங்கம் நடை பெற்றது. மூன்றாம் நாள் யுவ உத்சவத்தில் கல்லூரி மாணவர்களிடையே பல்வேறு போட்டிகள் நடை பெற்றனர். பெஜாவர் மடத்தின் பூஜ்யஸ்ரீ விஷ்வேச தீர்த்த சுவாமிகள், சா மு கிருஷ்ண சாஸ்திரி, ஸ்ரீ ராமசுப்ரமணியம், டாக்டர் எஸ் நரசிம்ஹன், ( டி ஜி வைஷ்ணவ கல்லூரி முதல்வர்), ஸ்ரீ தேவி பிரசாத் (மெட்ராஸ் சம்ஸ்க்ருத கல்லூரி, முதல்வர்), ஸ்ரீமதி விஜயலட்சுமி , தயாரிப்பாளர் சென்னை தூர்தர்ஷன் கேந்திரம், திருப்பூர் கிருஷ்ணன் (அமுதசுரபி ஆசிரியர்), டாக்டர் எம் எம் அலெக்ஸ், ப்ரெசிடென்ட் சம்ஸ்க்ருத பாரதி (தமிழ்நாடு), சுவாமி அத்மஞானந்தா (ராமகிருஷ்ண மடம்), ஸ்ரீ தினேஷ் காமத் (அகில பாரத சம்ஸ்க்ருத பாரதி செயலாளர்) மற்றும் பல்வேறு பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த மூன்று நாள் நிகழ்ச்சி டி ஜி வைஷ்ணவ கல்லூரி மற்றும் சம்ஸ்க்ருத பாரதி இணைந்து நடத்தியது. சம்ஸ்க்ருத பாரதி (தமிழ்நாடு) செயலாளர் டாக்டர் ராமசந்திரன் மற்றும் ஸ்ரீ பி ஹரிதாஸ் டி ஜி வைஷ்ணவ் கல்லூரி செயலாளர் ஒருங்கிணைந்து செயலாற்றினார். ஸ்ரீராம் சம்ஸ்க்ருத பாரதி (தமிழ்நாடு) அமைப்பாளர் தலைமையில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் நடைப்பெற்றன.

பைப் லைனில் கோபர் காஸ்; ஒரு நூதன யோசனை 

'தமிழகத்தில் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பசுக்களை பயன்படுத்தி கோபர் காஸ் மையங்களை நிறுவுங்கள். பைப் லைன் மூலம் அந்த எல்லா கேந்திரங்களையும் ஒருங்கிணையுங்கள்'. இதன் மூலம் சமையல் எரிவாயு தட்டுபாட்டை குறைக்க முடியும்,' என்று தமிழக அரசுக்கு ஹிந்து முன்னணி ஒரு யோசனை தெரிவித்துள்ளது. அறிக்கை ஒன்றில் ஹிந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன், ஊரக ஏழைகளுக்கு விலையில்லா பசு மாடுகள் வழங்கும் திட்டத்தை பாராட்டி இருக்கிறார். ஆனால் பசு வதையை மாநில அரசு அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் கோரி இருக்கிறார். அவ்வாறு செய்யாவிட்டால் பசுவினம் சார்ந்த விவசாயம், பசுவினம் சார்ந்த வெண்மை புரட்சி, பசுவினம் சார்ந்த மருந்து உற்பத்தி உள்ளிட்ட எதுவுமே நடைபெற முடியாது என்று அவர் சுட்டி காட்டியுள்ளார். ஆயிரக்கணக்கான மாடுகள் கேரளா கசாப் கூடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அவர் கோரினார். 

தாய்நாடு மறக்க முடியாத மருத்துவர் 

கடந்த வாரம் தமிழ்நாடு மாநில கவர்னர் ரோசயாஹ் அவர்கள் டாக்டர் TK பார்த்தசாரதி, ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் வேந்தர் அவர்களுக்கு, 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது. தனது 12 வது வயதில் ஆர் எஸ் எஸ் சில் இணைந்தார். இவரது சகோதரர் ரங்கநாதன் அப்போது ஆர் எஸ் எஸ்ஸில் பிரச்சாரக். எனவே இவரது வீட்டிற்கு ஸ்ரீ குருஜி வருகை புரிந்ததுண்டு. தமது உள்ளத்தில் சங்க சிந்தனை பதிந்ததன் காரணமாக மருத்துவ பட்டப்படிப்பு, வெளிநாடுகளில் மேற்படிப்பு முடித்து 20 ஆண்டுகள் பணிபுரிந்து பாரதம் திரும்பிய இவர், இளம் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்களை உருவாக்கும் இலக்கு கொண்டிருந்தார். ஸ்ரீ ராமச்சந்திராவில் ஆசிரியப்பணி மேற்கொண்டார். முழு பொறுப்பும் இவரிடம் வந்து சேர்ந்தது. அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்துடன் ஸ்ரீ ராமச்சந்திர கூட்டாக செயல்படும் பெருமித நிலைக்கு அந்த நிறுவனத்தை தரம் உயர்த்தினார். தற்போது அதன் புரோ சான்சலராக தொடர்ந்து வழிக்காட்டி வருகிறார்.


Post a Comment

0 Comments