Chennai - Sandesh (SETHU)

சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன 20 வைகாசி ( 2012, ஜூன் 11)

ஆனந்த் செஸ்ஸில் உலக நாயகன் - ஐந்தாவது முறையாக!

தமிழ்நாட்டில் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த் பாரதத்தின் முதல் கிரான்ட் மாஸ்டர் பட்டதை வென்றவர். பல செஸ் ஆஸ்கர் விருதை வென்றவர். இன்று ரஷ்யவில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த போரிஸ் ஜெல்பான்ட் என்பவரை வீழ்த்தி ஐந்தாவது முறையாக உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். வென்ற போதும் அவரிடம் வெளிப்பட்ட அடக்க பண்பே, அவருடைய வெற்றிக்கு காரணம். இந்த சதுரங்க விளையாட்டு (அறிவாற்றல் விளையாட்டு) பாரதத்தின் மிக பழமையான விளையாட்டு ஆகும். இதை உலகுக்கு கொடுத்த பெருமை நம் நாட்டை சேரும். இந்த தொன்மையான சதுரங்க விளையாட்டை கிராமங்களில் ஊக்குவிக்க வேண்டும். 

ஊடகத்தை மாற்ற தேசிய முயற்சி!

தமிழ்நாட்டை சேர்ந்த அச்சு மற்றும் ஊடக நிபுணர்கள், விஜயபாரதம் சார்பில் நடைபெற்ற ஐந்து நாள் இதழியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு வகுப்புகள் நடத்தினர். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் 50 பேர் கலந்து கொண்டனர். நிபுணர்களில் குறிப்பிட தக்கவர்கள்: ஸ்ரீ எ எம் ராஜாகோபால், (எடிட்டர், குமுதம் ஜ்யோதிடம்), சுவாமி விமூர்தானந்தா (எடிட்டர், ராமகிருஷ்ண விஜயம்), ஸ்ரீ மாலன் (எடிட்டர், புதிய தலைமுறை), ஸ்ரீ பகவான் சிங் (எடிட்டர், டெக்கான் கிரானிகல்), கட்டுரையாளர் ஸ்ரீ குருமூர்த்தி. ஜெயா டி வி, என். டி. டி.வி, ஆல் இந்திய ரேடியோ போன்ற துறைகளில் இருந்து நிபுணர்கள் கலந்து கொண்டு வழி நடத்தினர். ஸ்ரீ வீரபாகு, (எடிட்டர் விஜயபாரதம்,), ஸ்ரீ மகாதேவன் (நிபுணர்), ஸ்ரீ நம்பி நாராயணன் (சுதேசி ஜாக்ரன்) ஆகியோர் இந்த பயிற்சி முகாமை சிறப்பாக வழி நடத்தி சென்றனர். 

தொன்மையான ஹிந்துத்வ அத்தாட்சி!

சென்னை மறைமலை நகர் அடுத்த கடம்பூர் கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் 500 ஆண்டு பழமை வாய்ந்த விஜய நகர் மன்னர் காலத்து கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுள்ளது. பல்வேறு சிறப்பு செய்திகளை கொண்ட அந்த கல்வெட்டின் இறுதிப்பகுதியில் "இந்து தர்மத்துக்கு அகிதம் (தீங்கு) பண்ணினவர்கள் கங்கை கரையில் காராம் பசுவை கொன்ற தோஷத்தில் போவர்" என்று கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments