Why FDI in Multi brand retails is to be opposed

A Seminar was held on 'Why FDI in Multi brand retails is to be opposed' by Swadeshi Jagran Manch, Tamilnadu on 12-7-2011. More than 1000 representatives attended the seminar. The details published in Dinamani is herewith furnished. 

சில்லறை வணிகம் இல்லையெனில் நாட்டின் பொருளாதாரமே அழிந்துவிடும்
First Published : 13 Jul 2011 02:26:29 AM IST
Last Updated : 13 Jul 2011 04:48:07 AM IST

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் பேசுகிறார் பத்திரிகையாளர் எஸ்.குருமூர்த்தி. உடன் (இட

சென்னை, ஜூலை 12: சில்லறை வணிகம் இல்லையென்றால் நாட்டின் பொருளாதாரமே அழிந்துவிடும் என்று பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

1991-92-ல் உலகமயமாக்கல் கொள்கை அமலாக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ளவர்களுக்கு பொருள்களை உற்பத்தி செய்யத் தெரியாது. வியாபாரம் செய்யத்தான் தெரியும். எனவே, உற்பத்தித் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்று டாடா போன்ற பெரிய நிறுவனங்களிடம் மத்திய அரசு கூறியது.

ஆனால், இன்று இந்தியர்களுக்கு வியாபாரம் செய்யத் தெரியாது என்று கூறி வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதிக்க துடித்துக் கொண்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக நேர்த்தியாக பொருள்களை உற்பத்தி செய்யும் திறன் இந்தியர்களுக்கு இல்லை என்று மத்திய அரசு கூறியபோது, லாரிகளை மட்டும் தயாரித்துக் கொண்டு இருந்த ரத்தன் டாடா கார்களையும் தயாரித்து உற்பத்தித் துறையில் சாதித்துக் காட்டினார். அது இன்றும் நமக்கு வழிகாட்டியாக உள்ளது.

சில்லறை வணிகம்தான் நமது பொருளாதாரத்தின் ஆணிவேராகும். இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் நடத்துபவர்கள் தொடக்கத்தில் சிறு வியாபாரிகளாக இருந்தவர்கள்தான். அனுபவத்தின் மூலம் மட்டுமே தொழில் நடத்தும் திறனைப் பெற முடியும்.

சில்லறை வணிகம் என்பது திறந்தவெளி பல்கலைக்கழகம் போன்றது. சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது. அதில் மாறுதல் ஏற்பட்டால் விபரீதமான விளைவுகள் ஏற்படும். சில்லறை வணிகத்தில் அந்நிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால் நமது நாட்டின் உற்பத்தித் துறை முற்றிலும் அழிந்து போகும். அதனால் நாட்டின் பொருளாதாரமே அழிந்து விடும். அமெரிக்காவில் இதுதான் நடந்தது.

கிராமங்களை விட்டு மக்கள் வெளியேறினால் கிராமங்கள் மட்டும் அழியாது. விவசாயமும் அழிந்து விடும். நமது நாட்டில் 30 கோடி மக்கள் 35 சதவீத நிலத்தில் விவசாயம் செய்கின்றனர். சிறு விவசாயிகளான இவர்கள்தான் 49 சதவீத விளைபொருள்களை உற்பத்தி செய்கின்றனர். இவர்கள் இல்லாவிட்டால் நாம் அனைவரும் பட்டினிதான் கிடக்க வேண்டும்.

அதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்யவே முடியாது. இந்தத் தகவல்கள் எல்லாம் 2007 திட்டக் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிறு விவசாயம் போன்றது தான் சில்லறை வணிகமும். சில்லறை வணிகம் பெரிய நிறுவனங்களாக மாறினால் நாட்டின் பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும். சில்லறை வணிகத்தை நம்மால் அழிக்க மட்டும்தான் முடியும். உருவாக்க முடியாது.

சில்லறை வணிகர்கள் வெறும் வியாபாரிகள் மட்டுமல்ல. அவர்கள் சமுதாயத்துடன் இணைந்துள்ளனர். வாடிக்கையாளர்களுக்கும் அவர்களுக்கும் காலம் காலமாக உறவு உள்ளது. அவர்கள் தான் சமூகப் பணிகளுக்கும், ஆன்மிகப் பணிகளுக்கும் உதவி செய்கிறார்கள். சில்லறை வணிகம் அழிந்தால் நமது கலாசாரமும் அழிந்து விடும்.

இன்னும் 5 ஆண்டுகளுக்கு சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அனுமதிக்கப்படாமல் இருந்தால், இப்போது சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விடும். தங்களது சில்லறை வணிக நிறுவனங்கள் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்களுக்கு விற்று லாபம் பார்ப்பதற்காகவே அந்நிய முதலீட்டை கொண்டுவர முயற்சித்து வருகிறார்கள்.

இதனை தடுக்க அரசியல் கலப்பின்றி வணிகர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும். வியாபாரிகள் ஒன்றாக இணைந்தால் அரசியல்வாதிகள் வழிக்கு வந்துவிடுவார்கள். மக்கள் சக்தியின் மூலமே சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை தடுக்க முடியும் என்றார் எஸ். குருமூர்த்தி.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா, பொதுச்செயலாளர் கே. மோகன், இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஏ. சண்முகவேலாயுதம், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ராம. நம்பிநாராயணன், தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் எஸ்.பி. ஜெயபிரகாசம் உள்ளிட்டோர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.

Post a Comment

0 Comments