மக்கள் வாழ்வில் வளங்கள் மலர ஓர் மக்கள் இயக்கம்


மாபெரும் மக்கள் ஆதரவு!

சுதேசி ஜாகரண் மஞ்ச் அமைப்பு 2020 மே 20 அன்று சுதேசி ஸ்வாலம்பன் அபியான் (சுதேசி சுய சார்பு பிரச்சாரம்) தொடங்கியது. இந்த பிரச்சார இயக்கத்தின் முதல் கட்டமாக டிஜிட்டல் கையொப்பங்களுக்காக ஒரு முயற்சி தொடங்கப்பட்டது, சீனப் பொருட்களைப் புறக்கணிப்பதாக. லட்சக்கணக்கான மக்கள் உறுதிமொழி எடுத்துள்ளனர், மேலும் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

அபியான் இலக்கு: 700 மாவட்டங்கள்

நாம் இந்த பிரச்சாரத்தை நாட்டில் கிட்டத்தட்ட 700 மாவட்டங்களுக்கு கொண்டுசெல்ல முடியும். இத்தருணத்தில், தொலைக்காட்சி சேனல்கள மற்றும் சிவில் சொசைட்டி அமைப்புகளால் நடத்தப்பட்ட ஆய்வுகள், சுதேசியைப் பயன்படுத்துவதாகவும், சீன பொருட்கள் அனைத்தையும் புறக்கணிப்பதாகவும் நாட்டில் கிட்டத்தட்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. அரசு ஒப்புதல் பெற வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கி சீன முதலீடுகளுக்கு அரசாங்கம் ஏற்கனவே கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அத்தோடு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யவும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன, சீன நிறுவனங்களின் டெண்டர்கள் அதிக எண்ணிக்கையில் ரத்து செய்யப்படுகின்றன, சில நாட்களுக்கு முன்பு 59 சீன செயலிகள் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன.





தேசிய, மாவட்ட குழுக்கள்

கடந்த ஒன்றரை மாதங்களில், சிறு தொழில்களுக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு அளவிலான தொழில்முனைவோர், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், தொழில் மற்றும் வர்த்தக தலைவர்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அபியான் அமைத்தது. பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் இவற்றின் ஒத்துழைப்புடன், மக்களைச் சென்றடைகிறது, மேலும் சுதேசி / உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிப்பதன் நன்மைகளை கூறுகிறது, சுதேசி / உள்ளூர் தயாரிப்புகளின் பட்டியல்களை விநியோகிக்கிறது. இந்த நோக்கத்திற்காக தொழில்துறை, வர்த்தக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அளவிலான குழுக்கள் அமைத்திருக்கிறது .



உள்ளூர் தொழில்களுக்குப் புத்துயிர்

உலகமயமாக்கல் சகாப்தத்தில் வீழ்ந்துபோன உள்ளூர் தொழில்களுக்குப் புத்துயிரூட்டுவதற்கான தருணம் இது என்ற விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டுள்ளது. மக்கள் நலன், நிலையான வருமானம், வேலைவாய்ப்பை உருவாக்க உதவுதல் எல்லாவற்றிலும் மக்கள் மீது நம்பிக்கை வைக்கும் பொருளாதாரக் கொள்கைகள் இவற்றை முன்னெடுப்பதற்கான நேரம் இது.



சிறு, குறு நடுத்தர தொழில்களின் (MSME) திரள்கள்

நாட்டில் 700 க்கும் மேற்பட்ட சிறு, குறு நடுத்தர தொழில்களின் (MSME) திரள்கள் (clusters) உள்ளன. இந்தத் திரள்கள் தொழில்துறை வளர்ச்சியின் நீண்ட நெடிய, வளமான வரலாறு உள்ளவை. சீனாவிலிருந்து நியாயமற்ற போட்டி, நியாயமற்ற இறக்குமதிக் கொள்கைகள் இவை காரணமாக இந்த தொழில்துறை திரள்கள் பல நொடித்துள்ளன. அவற்றுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்து பலப்படுத்தப்பட வேண்டும், இதனால் அவை வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல் உயர் தரமான தயாரிப்புகளை மிகவும் குறைவான செலவில் உற்பத்தி செய்யும். உற்பத்தியில் எதிர்கால வளர்ச்சியைப் பெறுவதற்காக நாடு முழுவதும் மாவட்ட அளவில் இதுபோன்ற மேலும் தொழில்துறை திரள்கள் அடையாளம் காணப்படுகின்றன.



கிராமம் சுபிட்சம் அடைய

பாரதம் தற்சார்பு அடைவதில் கிராமிய கைவினைப்பொருட்கள், வேளாண் தயாரிப்புகளும் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். உணவு பதப்படுத்துதல், கோழி, பால், மீன்பிடித்தல், காளான் வளர்ப்பு, மூங்கில் விவசாயம், பூந்தோட்டக் கலை, தோட்டக்கலை போன்றவற்றை உள்ளடக்கிய வேளாண் நடவடிக்கைகள் மூலம் வேலை வாய்ப்புகளை கிராமப்புறங்களில் உருவாக்க நிறைய வழிகள் உள்ளன. ஒருங்கிணைந்த கிராமப்புற வளர்ச்சி என்பது காலத்தின் தேவை. விழிப்புணர்வு உருவாக்கப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஊக்குவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.



சுதேசி ஜாகரண் மஞ்ச் பின்பலம்

இந்த சுதேசி ஸ்வாலம்பன் அபியான் நடைபெறும் வேளை, உள்ளூரை சார்ந்த சிறு அளவிலான உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள்,சிறு வணிகர்களுக்கு தோள்கொடுத்து உதவும் வேளையாகும்.. சுதேசி ஜாகரண் மஞ்ச் ஏற்கனவே தொழில்துறை சிக்கல்களை அடையாளம் காண பல திரள்களில் (கிளஸ்டர்களில்) ஆய்வுகளை மேற்கொண்டது. பல சந்தர்ப்பங்களில் சுதேசி ஜாகரண் மஞ்ச் தலையீடு மிகுந்த பயனுள்ளதாக இருந்துள்ளது. உள்ளூர் தொழில்துறையின் இன்றைய உந்துதலால் உள்நாட்டு தொழில்துறையை புதுப்பிக்க இது போன்ற ஆய்வுகள் மேலும் ஒரு பெரும்பணியாக மேற்கொள்ளப்படும்.

சுதேசி வெற்றிச் செய்தி பரப்புவோம்

உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட வேளாண் சார்ந்த பிற நடவடிக்கைகளை கிராமப்புற மக்கள் மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளில் வெற்றிகரமான செயல்படுத்தப்பட்ட சோதனைகள் அந்த மக்களிடையே விளம்பரப்படுத்தப்படும்.

Post a Comment

0 Comments