கிலாபாத் – மதக் கோட்பாடும் வரலாற்று பின்னணியும்

டாக்டர் ஸ்ரீரங் கோட்போலே

மதப்பற்றுள்ள எந்த ஒரு முஸ்லீமிற்கும், அவர் மதக் கோட்பாடு அவருடைய மனசாட்சியை விடவும் மேலானது. இஸ்லாமிய மதக் கோட்பாடு, அவர்களுடைய மூன்று மத நூல்களை அடிப்படையாகக் கொண்டது – (1) குரான், (2) ஹதீத் (முஹம்மது நபியின் கருத்துக்கள், வழிமுறை) மற்றும் (3) சிரா (முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாறு) அல்லது சுன்னாஹ் (முஹம்மது நபியின் பாரம்பரியம், அவர் சென்ற பாதை). தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாகவோ சமூக ரீதியாகவோ ஒரு இஸ்லாமியரின் எண்ணம் மற்றும் செயல், ஒழுக்கமானதா சட்டதிற்குட்பட்டதா என்பதை அவர் மதக் கோட்பாடே தீர்மானிக்கும். சரியானது, நீதிக்குட்பட்டது, நல்லது, அறிவார்ந்தது, மத ரீதியானது என்பதை எல்லாம் அவர்களின் மதக் கோட்பாடு தெளிவாக குறிப்பிட்டுள்ளது. அந்தக் குறிப்புக்கள், உலகளாவிய தரத்திற்கு உட்படாமலும் நேர் எதிரானதாகவும் இருக்கலாம். உலகளாவிய உம்மாஹ் (இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்களின் சமூகம்) அடைப்படையில் தேசீய சிந்தனையைக் கடந்தது என்றாலும், இஸ்லாத்திற்கு ஒவ்வாத வகையில், அது பல தேச எல்லைகளால் பிரிக்கப்பட்டுள்ளது. தேசிய சிந்தனையை கடந்த ஒரு சித்தாந்தம் எப்படி எல்லைகளைக் கடந்த உலகளாவிய இஸ்லாம் என்ற அரசியல் இயக்கமாக மாறும் என்பதை சுலபமாக ஊகிக்கலாம். கிலாபாத் இயக்கம் பாரதீய முஸ்லீம்களின் சிந்தனை ஓட்டத்தில் ஆறு ஆண்டுகள் இருந்தாலும், இந்த இயக்கத்திற்கு அவர்கள் மதக் கோட்பாட்டில் இடம் உள்ளது என்பது கவனிக்கத் தக்கது. அவர்கள் மதக் கோட்பாட்டில் இதற்கு இடம் உள்ளது என்பதால், கிலாபாத் இயக்கத்திற்கு வரலாற்றுப் பின்னணியும் வருங்காலத்தில் மீண்டும் தோன்றக் கூடிய வாய்ப்பு உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலே செல்வதற்கு முன், “உலகளாவிய இஸ்லாம்” என்ற சொற்றொடருக்கு என்ன பொருள் என்பதைப் பற்றி பார்ப்போம். கண்டறியப்பட்ட வரையில், இந்தச் சொற்றொடர் முதலில் பிரான்ஸ் வோன் வெர்னர் (முராத் எபண்டி) என்பவரால் துர்கிஸ்க்கோ ஸ்கிஸ்ஸின் (ஜெர்மனியில் துருக்கிய வரைபடம் என்று பொருள் 1877) மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் கேப்ரியல் சார்ம்ஸ் என்பவாராலும் 1881ம் ஆண்டு பயன்படுத்தப் பட்டது. இதற்கு இணையான இஸ்லாமிய பதம் “இத்திஹாத்-இ-இஸ்லாம்” அல்லது “இத்திஹாத்-இ-தின்” மற்றும் “உஹுவ் வெட்-இ-தின்” போன்றவை பல காலங்களாக ஓட்டோமான் அரசர்களுக்கும் பாரதம், மத்திய ஆசியா மற்றும் இந்தோனேஷியாவிலுள்ள இஸ்லாமிய அரசர்களுக்கும் இடையே பயன்பட்டு வந்துள்ளது (பாரதத்தில் கிலாபாத் இயக்கம் 1919-1924, முஹம்மது நயீம் குரேஷி என்பவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் 1973ம் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரை பக்கம் 6). “உலகளாவிய இஸ்லாம்” என்ற சொற்றொடர் சமீபத்திய உருவாக்கம் என்றாலும், அதற்கான அடிப்படை சிந்தனை கீழ்கண்ட குரான் வரிகளில் காணக் கிடைக்கிறது :
“உன்னுடைய இந்த உம்மாஹ்வே ஒரே உம்மாஹ் ஆகும். நானே உன்னுடைய கடவுள் மற்றும் காப்பாளன். ஆகவே நீ எனக்கு மட்டுமே பயப்படு ; வேறு யாருக்கும் பயப்பட வேண்டாம்.” (23:52).
தொடக்ககால இஸ்லாமிய வரலாற்றில் கிலாபாத்
குரானில், “கலிஃபா” (ஒருமையில்) அல்லது “குலாஃபா” (பன்மையில்) என்கிற பதம் “துணை பிரதிநிதி” அல்லது “வாரிசு” என்கிற பொருளில் 2.30, 4.59, 6.165, 35.39 மற்றும் 38.26 வரிகளில் காணக் கிடைக்கிறது. முதல் இஸ்லாமிய ஆட்சியாளர் முஹம்மது நபி ஆவார் (570 – 632). அவர் தன்னுடைய ஆன்மிக பயணத்தை 610ம் ஆண்டு துவங்கினாலும், 622ம் ஆண்டு மதினாவை ஆளத் துவங்கினார். எனவே, 10 ஆண்டுகளுக்கு அவரே இறைதூதர், அரசர், இராணுவ தளபதி, சட்ட வல்லுநர், நீதிபதி. குரானோ முஹம்மது நபியோ வேறு யாரையும் கலீபாவாக அங்கீகரிக்கவில்லை. இஸ்லாத்தில் முஹம்மது நபியே இறைதூதர்களில் இறுதியானவராக இருக்கிறார் (குரான் 33:40). இறைதூதர் என்கிற அவருடைய இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. அனால், அரசர் என்கிற அவருடைய இடத்தை வேறு ஒரு முஸ்லீம் நிரப்பலாம் என்று குரான் கூறுகிறது. “இறை நம்பிக்கையாளரே ! இறைவன் சொல்படியும், இறைத்தூதர் சொல்படியும், உங்களில் யாருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதோ, அவர்கள் சொல்படியும் கேளுங்கள்(4:59)”. ஆட்சியில் இருப்பவரின் கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்று பல இடங்களில் ஹதீதில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக, அல்லாஹ்வின் பெயரில் ஆட்சி செய்பவர்களை அவமரியாதை செய்தால், அல்லாஹ் அவரை அவமரியாதை செய்வார் (திர்மிஜி, அல்-ஹதீத், மிஷ்காத்-உல்-மஸாபி, புத்தகம் 2, இஸ்லாமிய புத்தக நிலையம், டெல்லி, பக்கம் 560).
முதல் கலீபாவான அபு பக்கர் “கலிஃபாது ரஸூல் அல் அல்லாஹ்” (அல்லாஹ்வின் தூதருடைய வாரிசு) என்று அழைக்கப் பட்டார். முதல் நான்கு குலாஃபா, அபு பக்கர் (632 – 634), உமர் (634 – 644), உத்மான் (ஒஸ்மான், ஒட்டோமான் 644 – 656), அலி (656 – 661) ஆகியோர் “குலாஃபா ரஷீதுன் (சரியான முறையில் வழி நடத்தப்பட்ட குலாஃபா)” என்று சுன்னி பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்களால் அழைக்கப் பட்டனர். அவர்கள் நான்கு பேரும், முஹம்மது நபியின் ஹாஷிமிட் குடும்பத்தினர் பிரிவைச் சேர்ந்த குரைஷ் வகுப்பினர். இவர்கள் காலத்தில், இஸ்லாமிய படைகள், சஸ்ஸானிட் பேரரசை வீழ்த்தியதுடன், பைசந்தின் பேரரசை பாதி ஆக்கியதோடு அல்லாமல் அதை நிர்மூலம் ஆக்கினர். மேலும், தெற்கு மற்றும் மத்திய ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா மூலம் ஐபேரியன் தீபகற்பம் வரை விஸ்தீரணம் செய்தனர். முதல் நான்கு குலாஃபாக்களின் காலம் (632 – 661), இஸ்லாமியர்களின் பொற்காலம் என்று எண்ணப் படுகிறது. இந்தப் “பொற்காலத்தில்” தான், முதல் நான்கு குலாஃபாக்களில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.
அலிக்குப் பிறகு, உத்மான் குடும்பத்தைச் சேர்ந்த உமையாட்ஸ் பிரிவினர் வசம் கிலாபாத் பதவி சென்று 90 ஆண்டு காலம் அவர்கள் ஆட்சி செய்தனர். 750ம் ஆண்டு, அப்பாஸிட் வம்சம் உமையாட்ஸ் வம்சத்தினரை வீழ்த்தி ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கிலாபாத்ஐ நிறுவினர். முஸ்லீம் நாடுகளில் உள்ள பல்வேறு வம்சத்தினரிடன் தங்கள் அதிகாரத்தை இழந்தாலும், துருக்கி ஓட்டோமானின் 1517ம் ஆண்டு எகிப்திய படையெடுப்பு வரை அவர்கள் தங்களிடம் அதிகாரம் இருப்பதாக காட்டிக் கொண்டிருந்தனர். ஓட்டோமான் வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள் 1517 முதல் 1924 வரை கலிஃபாவாக இருந்தனர். ஓட்டோமான் பேரரசு என்பது மற்ற ஒரு முஸ்லிம் பேரரசு அல்லது ஒரு முஸ்லிம் நாடு என்று கூற முடியாது. சுமார் ஐந்து நூற்றாண்டுகளாக, சுல்தான் மெஹ்மட் 1453ம் ஆண்டு கான்ஸ்டன்டினோபோலை பிடித்தது முதல், ஐரோப்பிய கிறிஸ்துவர்களுக்கு எதிராக இஸ்லாம் கொடியை அவர்கள் உயர்த்தி பிடித்துக் கொண்டிருந்தனர்.
இஸ்லாமிய வரலாற்றில் கிலாபாத் பற்றிய கட்டுக்கதை
மதப் பற்றுள்ள எந்த ஒரு முஸ்லீமும் தங்கள் மத நூலில் கூறியுள்ள “உம்மாஹ்” பற்றி படித்து இருந்தாலும், நாம் வரலாற்றை நோக்கினால், “கொள்கைகளில் இருந்து தவறியவர்” என்று கூறி முஸ்லீம்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டது புரியும். மற்ற மத நம்பிக்கையாளர்களை எதிர் கொள்ளும் பொழுது மட்டும் அவர்கள் உம்மாஹ் வெளிப்படும். நபி இறந்து 20 ஆண்டுகளிலேயே, ஷியா பிரிவு முஸ்லிம்களால் “கிலாபாத்” என்கிற சிந்தனையே கேள்விக் குறியானது. அவர்கள் அலிக்கு முன்னர் இருந்த கலீபாவை அங்கீகரிக்கவில்லை. மேலும், கவாரிஜ் பிரிவினர் கலீபா தேவையா என்றே வினா எழுப்பினர். சுன்னி பிரிவினரிடையே கூட, கலீபாவாக இருப்பவர், குரைஷ் பரம்பரையில் வந்தவராக இருக்க வேண்டுமா என்பதைப் பற்றி விவாதம் நடப்பதுண்டு.
750ம் ஆண்டு வாக்கில், உலகளாவிய அளவில் அங்கீகரிக்கப் பட்ட கிலாபாத் இல்லை என்பது உறுதியானது. இஸ்லாமிய பேரரசில் முக்கிய பங்கு வகித்தவர்களும் சிறு பங்கு ஆற்றியவர்களும் தங்களுக்கு தாமே “அமிர்-உல்-மொமினின்” (இறை நம்பிக்கை உள்ளவர்களின் படைத் தலைவர்) என்றும் “கலிபா” என்றும் பட்டம் சூட்டிக் கொண்டனர். ஒரு கட்டத்தில், இஸ்லாமிய உலகில், மூன்று குலாஃபா இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், இறை நம்பிக்கை உள்ளவர்களின் ஆதரவு தனக்குத் தான் என்று கூறிக் கொண்டனர். “தலைமை” கலிபா செயல் இழந்த போதும், சட்ட வல்லுநர்கள் அல்-மவார்டி (974 – 1058) மற்றும் அல்-கஜாலி (1058 – 1111) அதிகாரம் இருப்பதாக கூறிக் கொண்டிருந்தது, மங்கோலியர்களிடம் பாக்தாத் கலிபா 1258ம் ஆண்டு தோற்ற பிறகும் நிலவி வந்தது. சுன்னி முஸ்லிம்களில் பெரும்பாலானோர், கயிரோவிலுள்ள அப்பாசித் குலாஃபாவின் தலைமையையும் பின்னர் கான்ஸ்டான்டிநோபிலிலுள்ள ஓட்டோமான் அரசர்களின் தலைமையையும் ஏற்றுக் கொண்டனர் (குரேஷி, பக்கம் 7).
பாரதத்தில் கலிபா-சுல்தான் கூட்டு
711ம் ஆண்டு சிந்து பகுதியில் அரேபியர்கள் படையெடுப்பு நடத்திய காலத்திலிருந்தே “கலிபா தலைமை” என்ற கட்டுக்கதை பாரதத்திற்கு பரிச்சயம். முகலாயர் காலத்திற்கு முன்பிருந்தே, பாக்தாத்திலுள்ள அப்பாசித் குலாஃபா, அதன் பிறகு கைரோவில் முடி சூட்டிக் கொண்டவர்கள் ஆகியோருக்கு சுல்தான்கள் அடிபணிபவர்கள் என்றே நினைத்தனர். மஹ்மூத் கஸ்னா (998 – 1030), ஷம்ஸ்-உத்-தின் இல்டுட்மிஷ் (1211 – 1236), முஹம்மது பின் துக்ளக் (1325 – 1351) ஆகியோர் குறிப்பாக கலிபா மூலம் பதவி ஏற்றுக் கொண்டதாக அறிவித்தனர். சுன்னி வம்சத்தைச் சேர்ந்த சில ஆட்சியாளர்கள், டெல்லியிடமிருந்து சுதந்திரம் பெற அப்பாசித் குலாஃபாவின் பெயரை பயன்படுத்தினர். அவர்கள் ஆட்சியில் நாணயங்களில் அப்பாசித் குலாஃபாவின் பெயரை பொறித்தனர். 1526ம் ஆண்டு துவங்கிய முகலாய படையெடுப்பு வரை இந்தப் பழக்கம் இருந்தது. அதே சமயத்தில் தான், கிலாபாத் அதிகாரம் கைரோவிலிருந்து கான்ஸ்டான்டிநோபில்க்கு மாறியது. 18ம் நூற்றாண்டு வரை, இந்த இரண்டு பேரரசுகளுக்கும் ராஜாங்க ரீதியான தொடர்பு இருந்தாலும், பெர்ஷியா நாட்டு ஷியா பிரிவைச் சேர்ந்த சுதந்திர ஆட்சியாளர்களைப் போல் முகலாயர்களும் ஓட்டோமான்ஐ உலகளாவிய கலிபாவாக ஏற்கவில்லை. எனினும், முகலாயர்களின் ஆட்சி வீழ்ச்சி அடைய துவங்கும் தருணத்தில், இந்த எண்ண ஓட்டத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பலமான சான்று இல்லாவிட்டாலும், 18ம் நூற்றாண்டு மத்தியில், பாரதீய முஸ்லீம்கள் ஓட்டோமான் மேல் பற்று கொள்ள துவங்கினர் என்று கூற முடியும். டெல்லியைச் சேர்ந்த சுஃபி ஷா-வலி-உல்லா (1703 – 1762) துருக்கி சுல்தானை அமிர் உல் மொமினின் என்று இரண்டு முறை தன்னுடைய தாபிஹிம்மத்-இ-இலாஹியாவில் குறிப்பிட்டுள்ளார். பின்னர், 1789ல் திப்பு சுல்தான், ஓட்டோமான் கலிபா முதலாம் அப்துல் ஹமீத் இடமிருந்து பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள முயற்சித்தார் (குரேஷி பக்கம் 8, 9).
பாரதீய உலேமாக்களின் துருக்கி மோகம்
1840களின் வாக்கில் ஓட்டோமான் கிலாபாத் மீது பாரதீய முஸ்லிம்களின் பற்று தெளிவானது. 1841ல் மெக்காவிற்கு புலம் பெயர்ந்த பிறகு, வலி உல்லாவின் பேரன் ஷா முஹம்மது இஷாக் (1778 – 1846) தான் ஓட்டோமான் அரசியல் கொள்கைகளை ஆதரித்த முதல் பாரதீய ஆலிம் (விவரம் அறிந்தவர் மற்றும் உலேமா) ஆவார். அப்பொழுது முதல், வலி உல்லாஹ் பிரிவைச் சேர்ந்த உலேமாக்கள், “உலகளாவிய கிலாபாத்” என்கிற பட்டத்தை ஓட்டோமான் அரசர்களுக்கு அளிப்பதில் முனைப்பு காட்டினர்.
1850களில், சுல்தான்களை பாரதீய கலிஃபா என்று அழைக்கும்படி தங்கள் தூதுவர்கள் மூலம் வற்புறுத்தினர். ஆகவே 1854ம் ஆண்டு, அப்போதைய பாரத்திற்கான கவர்னர் ஜெனரல் டல்ஹவுசி (1812 – 1860) பாரதீய முஸ்லிம்களிடையே “மத நம்பிக்கையாளர்களின் படைத் தலைவன்” என்கிற எண்ணத்திற்கு ஆதரவு இருப்பதாக உணர்ந்தார். 1854ல் கிரிமியன் போர் துவங்கிய பொழுது பாரதீய முஸ்லிம்களிடையே, குறிப்பாக மேற்கு எல்லையை ஒட்டிய முஸ்லிம்களிடையியே, அதன் பால் பெரும் ஆர்வம் இருந்ததாக கூறப்படுகிறது. 1858களில் பாரதத்தில் முஸ்லிம் ஆட்சி வீழ்ந்த பின், கான்ஸ்டான்டிநோபிலுடன் இருந்த தொடர்பு மேலும் வலுப்பெற்றது. தங்களுக்கு ஒரு மையம் வேண்டியும் பிரிட்டிஷ் கொடுங்கோலில் இருந்து தப்பிக்கவும் பாரதீய உலேமாக்கள் ஒட்டோமான் கலிஃபாவை எதிர் பார்த்தார்கள். மேலும் பலர், குறிப்பாக ரஹமதுல்லாஹ் கைரான்வி (1818 – 91), ஹாஜி இம்தாதுல்லா (1817 – 99), அப்துல் கனி (இறப்பு 1878), முஹம்மது யாகூப் (பிறப்பு 1832) மற்றும் கைருதின் (1831 – 1908) ஆகியோர் மெக்காவிற்கு புலம் பெயர்ந்ததுடன் அதில் சிலர் கான்ஸ்டான்டிநோபிலுக்கும் விஜயம் செய்தனர். கராமத் அலி ஜௌன்பூரி (1800 – 73) போன்ற உலேமாக்களும் “பிரிட்டிஷ் நாட்டிற்கும் எங்கள் மதத்தின் அதிகாரபூர்வ தலைவரான துருக்கி சுல்தானுக்கும் இடையே நிலவி வரும் நல்லுறவின்” காரணமாக பிரிட்டிஷ் அரசிற்கு ஆதரவு அளிப்பதாக கூறினர் (குரேஷி பக்கம் 8, 9).
பாரதீய முஸ்லிம்களின் எண்ண ஓட்டத்தில் கிலாபா
துருக்கி சுல்தான் பற்று என்பது உலேமாக்கள் அளவில் மட்டுமல்லாது, முஸ்லிம் பத்திரிகைகளிலும் சாதாரண முஸ்லிம் மனங்களிலும் 1850களில் ஆழமாக இருந்தது. 19ம் நூற்றாண்டின் இறுதியில் வெளி வந்த முஸ்லிம் பத்திரிக்கைகளை பார்த்தால், 1875ல் நடந்த ரஷ்யா துருக்கி போர் முதல் அவர்களின் பிரிட்டிஷ் ஆதரவு போக்கு வெளிப்படும். பாரதீய முஸ்லிம்களின் இதே போக்கு, அடுத்த 40 ஆண்டுகளில் நடந்த துருக்கி கிரேக்க போர் (1896), டிரிபோலியில் இத்தாலி நடத்திய தாக்குதல் (1911) மற்றும் பல்கன் போர் (1912 – 14) ஆகிய போர்களில் வெளிப்பட்டது (கிலாபாத் இயக்கம் – பாரதத்தில் மத உருவகம் மற்றும் அரசியல் உருவாக்கம். எழுதியவர் கெயில் மினால். ஆய்வு செய்தவர் ஷெரீப் அல் முஜாஹித். Pakistan Horizon, Vol. 39, No.2, 1986, p.87). பாரதீய முஸ்லிம்கள், கிலாபாத்-அல்-இஸ்லாமின் நீண்ட ஆயுளுக்காகவும், வளத்திற்காகவும், வெற்றிக்காகவும் வெள்ளிக்கிழமை மதியம் நடக்கும் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களில் வேண்டுவர். 1870 முதல், இதையே தாங்கள் நடத்தும் பத்திரிக்கைகளிலும் பொது மேடைகளிலும் முழங்குவர் (அல் முஜாஹித் பக்கம் 81). சர் சயீத் அஹ்மத் (1817 – 98) போன்ற மத்திய வர்க்க முஸ்லிம்கள் துருக்கி கிலாபாத் என்கிற கட்டுக்கதையை பரப்பினார்கள்.
துருக்கி பற்றின் தன்மை
1830 முதல் பாரதீய முஸ்லிம்களின் துருக்கி பற்று பற்றி தெரிந்துக் கொள்ள மூன்று அம்சங்களை கோடிட்டுக் காட்ட வேண்டியது அவசியம். முதலாவது, உலகளாவிய இஸ்லாம் எண்ணம் பாரதீய முஸ்லிம்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. 17ம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மத்திய ஆசியா, இந்தோனேஷியா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளில் தோன்றிய உலகளாவிய இஸ்லாம் என்பது துருக்கியை மையமாக வைத்தே அமைந்தது. இரண்டாவது, உள்நாட்டுக் குழப்பம், ஐரோப்பிய ஆக்ரமிப்பு மற்றும் அரேபியர்களின் தேசிய எண்ணத்தில் இருந்து திசை திருப்ப துருக்கி கிலாபாத் கட்டுக்கதை துருக்கி சுல்தான்களாகிய சுல்தான் அப்துல் அஜிஸ் (1861 – 1876) மூலமாகவும் அவருக்குப் பின் வந்த இரண்டாம் அப்துல் ஹமீத் (1876 – 1909) மூலமாகவும் பரப்பப்பட்டது. மேலும், ஐரோப்பியர்கள் தாங்கள் செய்த ஆஸ்திரியா ஹங்கேரி போர் ஒப்பந்தம் (1908), இத்தாலி (1912) மற்றும் கிரேக்க பல்கேரிய போர் ஒப்பந்தங்களில் சுல்தானின் உரிமையை அங்கீகரித்தனர். மூன்றாவதாக, சுன்னி பிரிவினருடன் ஷியா பிரிவினர் சேர்ந்து ஓட்டோமோனே உலகத்திலுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் ஒற்றுமை படுத்த வல்லவர் என்று ஓட்டோமானுக்கு தங்கள் ஆதரவு தெரிவித்தனர். இதற்கான முனைப்பை, போஹ்ரா பிரிவு தலைவர்கள் பத்ருத்தின் தியாப்ஜி (1844 – 1906) மற்றும் மொஹம்மத் அலி ரோகே அவர்களின் அஞ்சுமன்-இ-இஸ்லாம் (மும்பை) அமைப்பு, ஹைதராபாத்தைச் (டெக்கான்) சேர்ந்த செராக் அலி (1844 – 1895), அவருக்கு பின் வந்த அமீர் அலி (1849 – 1928), ஆகா கான் (1877 – 1957), எம் எச் இஸ்பாஹனி , முஹம்மது அலி ஜின்னாஹ் (1876 – 1948) மற்றும் பலர் செய்தனர் (குரேஷி பக்கம் 15).
ஆகவே, 1919ம் ஆண்டு பாரதத்தில் தோன்றிய கிலாபாத் இயக்கம் என்பதற்கான விதை அவர்கள் மத நம்பிக்கையை ஒட்டியும் தொடக்ககால இஸ்லாமிய ஆட்சியில் இருந்து வரலாற்று பின்னணியும் கொண்டது. கலிஃபா என்கிற எண்ணம், அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த காரணத்தால், சுல்தான்களாலும், பாதுஷாக்களாலும், உலேமாக்களாலும், மத போதகர்களாலும், சாதாரண முஸ்லிம்களாலும் போற்றி பாதுகாக்கப் பட்டு வந்தது. இது பாரதீய முஸ்லிம்களுக்கான அம்சமாக இல்லாமல், உலகிலுள்ள பல முஸ்லிம்களுக்கான அம்சமாக இருந்தது.
மார்ச் 3, 1924 அன்று துருக்கி குடியரசின் தேசிய பாராளுமன்றம் “நாகரீகம் அடைந்த மற்றும் கலாச்சாரம் நிறைந்த மக்கள் பார்வையில் கேலிப் பொருளான” கிலாபாத்ஐ ஒழிப்பதாக முஸ்தபா கெமால் அதாதுர்க் தலைமையில் முடிவெடுத்தது. பாரதத்தில் கிலாபாத் இயக்கம் என்பது அந்த எண்ணத்தை மீண்டும் நிலை நிறுத்த நடந்த ஒரு முயற்சியே. முஸ்தபா சபிரி எபிண்டி (1869 – 1954), கடைசி ஒட்டோமான் ஷேக் அல் இஸ்லாம் (1924), அபு அல் ஆலா மவ்டுடி (1903 – 1979), ஜமாய்த்-இ-இஸ்லாமி (1967), தகியுதின் அல் நபானி (1909 – 1979), ஜோர்டானைச் சேர்ந்த ஹிஸ்புல் தஹ்ரிர் அல்லது சுதந்திர கட்சி (1925), செய்யித் குதுப் (1906 – 1966), எகிப்திய இஸ்லாமிய சகோதரத்துவம் (1964), முல்லா முஹம்மது உமர் (1960 – 2013), தாலிபான் (1996), அபு பக்கர் அல் பாக்தாதி (1971 – 2019), ISIS 2014 ஆகியோர் 1924க்குப் பிறகு கிலாபாத்தை நிறுவ முயன்றவர்கள்.
கிலாபாத்திற்கான போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது
…….. (தொடரும்)
(இதன் ஆசிரியர், இஸ்லாம், கிறிஸ்துவம், தற்கால பௌத்தர்கள் முஸ்லிம்கள் இடையே உள்ள உறவு, ஷுத்தி இயக்கம், மத ரீதியான மக்கள் தொகை, போன்ற தலைப்புக்களில் புத்தகங்கள் எழுதியுள்ளார்).

Post a Comment

0 Comments