"சிறுவயது முதலே வேதநெறி சார்ந்த இந்திய கலாச்சார முறைகளில் பயிற்சி பெற்றிருந்தேன். அதன்படி மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டிய அவசியம் மிகக்குறைவாக இருந்ததே நான் பத்திரமாக இருக்க எனக்கு உதவியது. எனது நண்பர்களுக்கு நான் யோகா பயிற்சி அளித்து வருகிறேன் (இலவசமாக). எனது வாழ்க்கை முறையைக் கண்டறிந்த பின், அவர்களும் தங்களை அதற்கேற்ப மாற்றிக்கொள்வதுடன் அதில் பெருமகிழ்ச்சியும் அடைகின்றனர்.
தார்மீகமான வளர்ப்பு தனிமனிதன் மற்றும் அவன் சார்ந்த சமூகத்தினிடமும் எவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை இப்போது அவர்கள் புரிந்து கொள்கின்றனர்". சாதாரணமான ஆனால் மிக மகிழ்ச்சியான வாழ்வு, மற்றவர் நலனுக்காக வேண்டிக்கொள்வது. தூய்மையான உணவு. தூய எண்ணங்கள். தூய செயல்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் மற்றோர்க்குச் சேவை செய்வதையும் தன் கடமையாக் கருதுவது என்று எத்தனையோ இருக்கின்றன. ‘நாகரீகம்’ என்ற பெயரில் மக்கள், உண்மையான, காலகாலமாக இருந்து வரும், எல்லோர்க்கும் நன்மை அளிக்கும் வாழ்க்கை முறையிலிருந்து விலகி, சொற்பகாலமே தாங்கும், கட்டுப்பாட்டு நெறிகளற்ற, தன்னை மட்டுமே மையப்படுத்தி அமையும் பாசாங்குத்தனமான ஒரு வாழ்க்கை முறையை ஏற்றுக்கொள்கிறார்கள். வேத கலாச்சாரம் சொல்லித்தருகின்ற உண்மையான எதிர்ப்பு சக்தி என்னவென்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டிய தருணம் வந்துவிட்டது. பாதகமான இந்த சூழ்நிலை, நமது வாழ்க்கைமுறையில் சரிசெய்ய வேண்டிய முக்கியமான ஒரு திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறது. இப்போதாவது, வேத நெறி வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள நாம் தயாரா? இது, நாம் தடம் புரண்டுவிட்டதை ஒப்புக்கொள்ள வேண்டிய தருணம் அல்லவா? நமது வாழ்க்கையில், ஒரு திருப்புமுனையாக மேன்மையான சமுதாய ஒழுக்கத்தை, நெறிமுறையை நிலைநாட்டுவதற்காக, இந்த நாகரீகம் மற்றும் தர்மம் இரண்டையும் சந்திக்கச்செய்ய வேண்டிய தருணம் இதுவேயன்றோ? நல்லறிவு தழைக்குமென நம்புவோமாக!
0 Comments