விளைச்சலில் பாதி கொடுத்த விவசாயி விஷ்ணு
பாரத விவசாயிகள் சங்கத்தின் அமைப்பு செயலர் பரத் பட்டேல், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கிராமங்களை பற்றி அறிய சுற்றுப்பயணம் செய்தார். அதன் ஒரு பகுதியாக மத்தியபிரதேசம், ஷாபுரா தாலுகாவில் உள்ள தலத்பூர் கிராமத்திற்கு சேவாபாரதி அமைப்பின் தன்னார்வலர்களுடன் சென்றிருந்தார். கிராம மக்களின் வாழ்வாதாரம் கொரோனா ஊரடங்கின் காரணமாக எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைபற்றி அங்குள்ள விவசாயிகளிடம் கலந்துரையாடியதன் மூலம் தெரிந்துகொண்டார். அந்த சமயத்தில், விஷ்ணு மல்லஹா என்பவரது குடும்பத்தினருடன் உரையாடிய பொழுது நாட்டு மக்கள் கஷ்டப்படுவதைபற்றி உரையாடல் சென்றது. அப்போது, 2 ஏக்கர் நிலத்தில் பயிரட்டுள்ள விஷ்ணு மல்லஹா, தனது நிலத்தின் விளைச்சலில் பாதியை [ ஒரு ஏக்கர்] மக்களுக்கு பயன்படுத்த இலவசமாக கொடுக்கிறேன் என்றார். அவரது குடும்பத்தினரும் மனமார ஒப்புக்கொண்டனர். 2ஏக்கர் நிலத்தை வைத்து கஷ்டஜீவனத்தில் வாழும் விவசாயி குடும்பம் அந்த நிலைமையிலும் தங்கள் நிலத்தின் விளைச்சலில் பாதியை மக்களுக்காக தர சம்மதித்த விவசாயி விஷ்ணு மல்லஹா குடும்பத்தினர் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
0 Comments