மானனீய மோகன் ஜி பகவத் யுகாதி அறிக்கை

மானனீய மோகன் ஜி பகவத் அறிக்கை 
அன்புள்ள ஸ்வயம்சேவக சகோதரர்களே, உங்கள் அனைவருக்கும் புது வருட 5122 யுகாதி விழா வாழ்த்துக்கள்.
இந்த வருடத்தின் தொடக்கமே ஒட்டு மொத்த உலகமே கடினமான சூழ்நிலையில் சிக்கியிருப்பது தெரிகிறது. உலகத்தின் இந்த போராட்டத்தில் பாரதமும் இணைந்திருக்கிறது.
அதனால் ஸ்வயம் சேவகர்கள்களுக்கும் இந்த போராட்டத்தில் பொறுப்பு இருக்கிறது. இந்த விழா நமது சங்கல்பத்தின் நாள் ஆகும். நமது சங்கம் பாரம்பரியத்தில் இதை சங்கல்பம் எடுக்கும் நாளாக நாம் பார்த்து வருகிறோம். 

கொரோனா என்ற விஷ கிருமியை கட்டுப்படுத்தி அதை முறியடிக்க நாடு முழுவதிலும் எடுக்கப்படும் முயற்சிகளில் வெற்றி பெற சங்கல்பம் எடுத்து, நாம் நமது வேலையை செம்மையாகவும் செய்ய வேண்டும். அதே நேரத்தில் நமது சமுதாய கடமையை சரியாக செய்ய வேண்டும்.  

நமது வேலை செய்யும் முறையை எப்படி என்பதை நாம் அறிவோம். நிகழ்ச்சி, நிகழ்ச்சி நிரல்கள் பல வகைகளாக உள்ளது என்பதையும் அதை பல வகைகளாக செய்யலாம் என்பதையும் அறிவோம். ஸ்வயம் சேவகர்கள் படுக்கையோடு வந்து ஒரே இடத்தில் உறங்கி பின் காலையில் எழுந்து சென்றாலும் அது சங்க வேலைதான் என்று டாக்டர் ஹெட்கேவார் கூறியுள்ளார். இதுபோல் சங்கத்தின் வாழ்க்கையில் சில நேரங்களில் நடந்தும் இருக்கிறது. சில காலங்கள் ஷாக்காகள் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் சங்க வேலை நடந்துகொண்டிருந்தது. நேற்று இரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கடைப்பிடித்தும் நாம் சங்க வேலை செய்ய முடியும். 
நாம் நமது வீட்டில் நமது குடியிருப்பில் சிறு குழுக்களாக நான்கிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு அல்லது நமது குடும்ப அங்கத்தினர்களோடு பிரார்த்தனா செய்யலாம்.  நம்முடைய வேலை முறை, விசேஷ நிகழ்ச்சி நிரல்கள்,  சாதாரணமான நேரத்தில் சரியாக இருக்கும். ஆனால் இதுபோன்ற அசாதாரணமான சூழ்நிலையில், புதிய முறையை கையாள வேண்டும். அறிவிக்கப்பட்ட நாட்களுக்கு ஷாக்காகளின் அடிப்படையாக விஷயம்  நாம்  ஒன்றுகூடி  பிரார்த்தனா  செய்ய வேண்டும்.  நமது சமுதாய ஒருங்கிணைப்பு சங்கல்பத்தை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். மேற்கூறிய விஷயத்தை செய்து அந்த சங்கல்பத்தை கடைபிடிக்கலாம்.
இன்றைய சூழல் குறித்து மானிய சர்கார்யவாஹ்ஜி முன்பு சில குறிப்புகளை கொடுத்துள்ளார். தேவைப்படும்போது வருங்காலங்களில் அவர்களுடைய குறிப்புகள் வரும். இயற்கையாகவே அந்த குறிப்புகள் கொரோனா விஷக் கிருமியை எதிர்த்து செய்யும் போராட்டத்தில் ஆட்சி நிர்வாகம், அரசாங்கம் என்ன முடிவுகளை அறிவிக்கின்றதோ  அதை ஒட்டியே இருக்கும்.
விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை நாமும் முழுமையாகக் கடைப்பிடித்து, சமுதாயமும் அதை சரியாக கடைபிடிக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், - அதுவும் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து கொண்டே ஒழுக்கத்தோடு கடமையாற்ற வேண்டும். மானனீய சர்கார்யவாஹ்ஜியின் குறிப்பு வருவதற்கு முன்பே நமது ஸ்வயம் சேவகர்கள் இந்த வேலையை தொடங்கிவிட்டனர்.
ஆட்சி நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு சமுதாயத்தின் அனைத்து தரப்பின் ஒத்துழைப்போடு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தேவைப்படுவோருக்கு உதவியை வழங்குதல், அரசாங்கத்தின் அனுமதிப் பெற்று அவர்கள் ஆலோசனையோடு கூடி ஏற்பாடுகள் செய்தல் போன்ற வேலைகளை ஸ்வயம் சேவகர்கள் தொடங்கி விட்டனர். 
நோயின் தீவிரம் எங்கு மிக அதிகமாக இருக்கிறதோ, எங்கெல்லாம் தேவையிருந்ததோ அங்கு மட்டும் தொடங்கியிருந்தது, தேவை இருப்பின் நாடு முழுவதிலும் செய்ய தயாராக இருக்க வேண்டி இருக்கும். 

எங்கு உதவி, நிவாரணம் தேவையோ அங்கெல்லாம் நாம் முழு ஒழுக்கத்தோடும், சட்டத்திற்கு உட்பட்டு செய்யவும், சமுதாயத்தையும் அவ்வாறு செய்ய தயார் படுத்தி, நாம் அனைவருடனும் செயல்பட வேண்டும். 

இந்த போராட்ட தருணத்தில் மிகமுக்கியமானது சமுதாயம் முழுவதையும் இந்த ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வைக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான். மருந்துகள் மற்ற உதவிகள் எல்லாம் துணை நிற்பவை தான். இந்த நோய் பரவுதல் மக்கள் கூடுவதால் தான் பரவுகிறது. அந்தக் கூட்டத்தை தொடர்ப்பை நிறுத்துவதுதான் முதல் பணி. அதைத்தான் ஆங்கிலத்தில் சோசியல் டிஸ்டன்ஸிங் (social distancing) என்று கூறுகின்றனர். 
அதை சரியாக நடைமுறைப்படுத்துவதுதான் இந்த போராட்டத்தின் வெற்றிக்கு அடி கோளாகும். அது சமுதாயப் பொறுப்பு. சமுதாய ஒழுக்கத்தின் மேன்மையை பொறுத்தே அமைகிறது. இந்த சமுதாய ஒழுக்கத்தை பின்பற்றுவதிலும், நமது ராஷ்ட்ரியத்தின் நன்னடத்தையை மனதில் கொண்டு,  நமது ராஷ்ட்ரத்தின் நன்மையை, சிறு சிறு சொந்த அசௌகரியங்களை ஒதுக்கிவிட்டு, சமுதாய வேலை செய்வது என்பது தான் எப்பொழுதும் சங்கம் தரும் பயிற்சியாகும். 
இந்த பழக்கம் நமக்கு இப்போது நடைமுறைக்கு உதவும். நாம் இந்த வேலையை செய்யும் பொழுது சமுதாயமும் இதற்கு பழக்கப்படும். நமக்கும் பயிற்சியாகும். பல சமயங்களில் தோன்றக்கூடியது - இது எவ்வளவு நாள் நீடிக்கும், நாம் சந்திக்கவில்லை என்றால் சமுதாய வேலை எவ்வாறு நடக்கும் என்பது.   
நமது வேலையானது தனிநபர் தயார் செய்வது, நல்ல மனிதனை உருவாக்குவது, நல்ல பழக்கங்களை பண்பாட்டை நிலைநிறுத்துவது, பண்பாட்டை  சமுதாயத்தில் பரவச் செய்வதாகும். இந்த விஷக்கிருமிகளை க்கு எதிராக நாம் செய்யும் போராட்டத்தில் கட்டுப்பாடுகளை பின்பற்றியும், சமுதாயத்தை பின்பற்ற செய்தும், நாம் நோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
சங்கல்பத்தின் சக்தி மிகவும் பலமானது. இந்த சங்கல்பத்தை மனதில் கொண்டு, கள நிலவரத்தில் நம் கடமையை கண்முன் நிறுத்தி, நமது ஸ்வயம் சேவக தன்மையை நினைவில் நாம் வைத்து முன்னேறிச் செல்வோம். 
இன்று நமது சங்க ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவாரின் பிறந்த தினமும் ஆகும். அவருக்கு இன்று நாம் ஆத்ய ஸர்ஸங்கசாலக் ப்ரணாம் செய்துள்ளோம். அவருக்கு நாம் ப்ரணாம் செய்யும் நேரத்தில் அவருடைய வாழ்க்கையை பார்க்கும் போது, இதுபோன்ற லட்சியத்தில் திடமாக நின்று, அன்றைய சூழ்நிலையின் அடிப்படையில் செயல்களை செய்வது, நாம் எடுத்துக்கொண்ட சங்கல்பத்தை நினைவில் வைத்து, நாமே எடுத்துக் காட்டாக இருந்து, அனைவரையும் மனதை தயார் சங்க வேலையின் அடிப்படை செயல்முறையாகும். சங்க ஸ்வயம்சேவக் எங்கு சென்றாலும், எந்த வேலை செய்தாலும், மேற்கூறிய அடிப்படையில் எந்த மாற்றமும் இல்லாமல் முழு மனதோடு, இந்த வழிமுறையில் இருந்து நழுவாமல் வரக்கூடிய நாட்களில் நாம் நமது கடமையை செய்து கொண்டு, ஒட்டு மொத்த நாட்டையும் இந்த விஷக்கிருமியின் தாக்கத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்திலும் வெற்றி பெறும் வழிமுறையை சமுதாயத்தின் முன் ஒரு உதாரணமாக நாம் கொண்டு வருவோம் என்று நம்பிக்கை உள்ளது. இந்த நம்பிக்கையை வெற்றி வடிவமாக்கும் சமயம் இது. இதை நாம் நமது சங்கல்பமாக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.  
  

Post a Comment

0 Comments