சர்ச்சை
“ஹிந்து கோயிலை நிர்வகிக்க பக்தர்களுக்கு மட்டுமே உரிமை”: விஸ்வ ஹிந்து பரிஷத்
“ஸ்டாலின் வீரமணி போன்ற நாத்திகர்கள், ஹிந்து விரோதிகள் கோயில் விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டாம்”

சமயப் பணிகளுக்காக பக்தர்கள் செலுத்திய காணிக்கை தான் தமிழக ஹிந்து கோயில்களில் சேர்ந்துள்ள சொத்து என்பதை விஸ்வ ஹிந்து பரிஷத் 1966 லேயே சுட்டிக்காட்டியுள்ளது. அந்த சொத்தை நிர்வகிக்க பக்தர்களுக்கே உரிமை. அரசு கட்டுப்பாடு என்ற பெயரில் கோயில்களை கொள்ளையடிப்பதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ளட்டும் எந்த கோயில் விஷயத்திலும் திமுக தலைவர் ஸ்டாலினும் திக தலைவர் வீரமணியும் மூக்கை நுழைப்பது கூடாது.
கோவிலை நிர்வகிக்க எந்த அரசுக்கும் உரிமை கிடையாது. ஹிந்து விரோதிகளும் ஸ்டாலின், வீரமணி, கருணாநிதி போன்ற நாத்திகவாதிகளும் கோயில் விவகாரங்களில் தலையிட அருகதை இல்லை.
கோயில்களில் தமிழில் வழிபாடு வேண்டும் என்று பெரும் கூச்சல் போடுகிற திராவிட கட்சிகளும் இடதுசாரிகளும் முஸ்லிம், கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் எந்த மொழியில் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பது பற்றி வாயே திறப்பதில்லை. இந்த இரட்டை வேடம் அடியோடு அம்பலமாகிவிட்டது.
ஆலயங்கள் அரசியல்வாதியின் பிடியிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும் என்று 1966 ல் விஸ்வ ஹிந்து பரிஷத்கோரிக்கை வைத்தது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும் நிர்வகிப்பதற்கும் உச்சநீதிமன்ற ஆணைப்படி அறக்கட்டளை அமைக்கப்பட்டது போலவே
ஆலயங்களை நிர்வகிக்க ஹிந்து சமய பெரியோர்களையும் அரசியல் சாராத ஹிந்து அமைப்பினர்களையும் கொண்ட தனி வாரியம் நிறுவப்படவேண்டும். கோயில்கள் சரிவர நிர்வகிக்கப் படுவதற்கும் கோயில் சொத்து பாதுகாக்கப்படுவதற்கும் முறையாக ஆலய வழிபாடு நிரந்தரமாக நிறைவு இதுதான் வழி.
(விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தென் பாரத ஒருங்கிணைப்பாளர் பி.எம். நாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையிலிருந்து)
0 Comments