சபரிமலை சர்ச்சை - பாரம்பரியத்தை குலைக்க த்ருப்தி தேசாய் குழு மீண்டும் முயற்சி


த்ருப்தி தேசாய் சபரிமலை பாரம்பரியத்தை குறிவைத்து சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இன்று அதிகாலை 5 மணி அளவில் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தனது குழுவினருடன் தரையிறங்கினார். சபரிமலைக்கு செல்ல போவதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார். சென்ற ஆண்டு சபரிமலை பாரம்பரியத்தை மீறிய இரண்டு பெண் அர்பன் நக்ஸகளில் ஒருவர் பிந்து அம்மினி, த்ருப்தி தேசாய் குழுவை சேர்ந்தவராவர். பெண் ஆர்வலர்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்ற அரசாங்கத்தின் கொள்கையாக இருந்த போதிலும், கேரள அரசாங்கம் இதுவரை தங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை. உச்சநீதிமன்றத்தின் பெரிய பெஞ்ச் தனது தீர்ப்பை வெளியிடும் வரை இந்த பெண்களை கோவிலுக்குள் நுழைய அரசாங்கம் அனுமதிக்காது என்று இப்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழு கோவிலுக்குள் நுழைவதற்கு வற்புறுத்தினால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.

சபரிமலை கோவில் இருக்கும் பத்தனம்திட்டா மாவட்டத்திற்குள் நுழைந்தால், அவருக்கும் அவரது குழுவினருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது என்று கொச்சி போலீஸ் கமிஷனர் த்ருப்தி தேசாயிடம் தெரிவித்துள்ளார். கொச்சி சர்வதேச விமான நிலையம் வரை (கேரளாவை விட்டு வெளியேறுவதற்கு) பாதுகாப்பு அளிக்க முடியும் என்று தெரிவித்தனர்.

பக்தர்கள் முரட்டுத்தனமாக கையாளப்பட்டனர்

முன்னதாக த்ருப்தி தேசாய் குழுவினர் கொச்சி நகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். ஐயப்ப பக்தர்கள் கமிஷனர் அலுவலகத்திற்கு முன் 'நாம ஜபம்' மூலம் தங்களுடைய எதிர்ப்பை வெளிகாட்டிக்கொண்டிருந்த பொழுது லெஃப்டிஸ்ட் பிந்து அங்கு முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டார். போலீசார் பிந்துவை யாருக்கும் தெரியாத இடத்திற்கு அழைத்து சென்றனர். அவள் விமான நிலையத்தில் 'பைட்' கொடுக்கும் பொழுது 'இது ஜனம் டிவி. இவர்களுக்கு கருத்து கூற வேண்டாம்' என் பிந்துவின் குரல் ஒலித்தது. கடந்த வருடம் ஜனம் டிவி மட்டும் தான் அனைத்து ஹிந்து எதிர்ப்பு சக்திகளின் உண்மையை வெளிகொணர்ந்தது. 

முன்னதாக, இந்து ஐக்ய வேதி மற்றும் பாஜக தலைவர்கள் தலைமையிலான பக்தர்கள் சாலையில் அமர்ந்து ‘நாமஜபம்’ நடத்தினர், சபரிமலை பாரம்பரியத்தை இழிவுபடுத்த முயற்சிப்பதாக தங்களுடைய எதிர்ப்பு தெரிவித்தனர். பின், அவர்கள் கமிஷனர் அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

Post a Comment

0 Comments