அமர்நாத் யாத்திரை (பகுதி -2) - பயங்கரவாதத்தின் கோட்டையில் ஹர-ஹர மகாதேவா

- நரேந்திர செகல் -
வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற சமஸ்கிருத கிரந்தங்கள் இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தை மகிமைப்படுத்தியதைப் போலவே, தீர்த்த யாத்திரை ஸ்தலங்கள், கண்காட்சிகள், திருவிழாக்கள் மற்றும் மத யாத்திரைகள் ஆகியவை நமது பரந்து விரிந்த பாரத தேசத்தை இமயமலையில் இருந்து கன்னியாகுமாரி வரை ஒருமைப்படுத்தி உள்ளது . 

உலகின் மிக உயரமான இமாலய மலையின் பனி மூடிய சிகரங்களின் மேல் 15,000 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அமர்நாத் ஷேத்திரத்தின் புனித குகையில் , கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் பனிலிங்கதின் பூஜை, 350 ஆண்டுகளாக நடந்து வரும் புனித கழியின் யாத்திரை, 150 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் தற்போதைய அமர்நாத் யாத்திரை ஆகியவை சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியா மற்றும் இந்து சமுதாயத்தின் ஒற்றுமை மற்றும் நம்பிக்கையின் அடையாளமாகும்.

இந்தியா முழுவதும் அமைந்துள்ள அனைத்து ஸ்தலங்களிலும் அமர்நாத் ஷேத்திரத்தின் பயணம் மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. செல்லும் வழி முழுவதும் பனியினால் மூடப்பட்டு, சிரமங்களால் நிறைந்துள்ள போதும் உலகம் முழுவதிலுமிருந்து இந்துக்கள் குரு பூர்ணிமாவில் தொடங்கி ஷ்ரவன் பூர்ணிமா வரை முழு நம்பிக்கையுடனும் பக்தியுடனும் வழிபட இங்கு வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், இந்த பயணத்தை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில், இந்த பயணத்தின் காலம் ஒரு மாதமாக இருந்தது, ஆனால் அப்போதைய ஆளுநரான ஜெனரல் எஸ்.கே. சின்ஹா அவர்கள் அதை இரண்டு மாதங்களாகச் செய்தார். அப்போதைய முதல்வர் முப்தி முகமது சயீத் இதை கடுமையாக எதிர்த்தார், ஆனால் ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்றம் இந்த யாத்திரையை இரண்டு மாதங்களுக்குச் செல்ல அனுமதித்தது.

பல்வேறு வகையான இயற்கை, சமூக மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு சவால் விடும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், அமர்நாத் ஷேத்திரத்தில் பனியினால் ஆன லிங்கத்தை தரிசனம் செய்யப் புறப்படும் அமர்நாத் யாத்திரையானது, தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக, பாகிஸ்தானால் கையாளப்படும் பயங்கரவாதத்திற்கு பலியாகியுள்ள ஜம்மு-காஷ்மீர் மாகாணத்தில் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஒரு அற்புதமான உதாரணத்தை அளித்து வருகிறது இந்த யாத்திரை. பயங்கரவாதத்தின் கோட்டையில் ஹர-ஹர மஹாதேவா என்று எழும் கோஷமிகு சொற்களின் அதிர்வுகள், பாரதத்தின் பாரம்பரியமிக்க கலாச்சார தேசியவாதமானது ஆன்மீக அறிவொளியை நன்றாக வளர்த்திருக்கிறது என்ற உண்மையை வெளிப்படுத்துகிறது. இதை யாராலும் அழிக்க முடியாது.

2008 ல் மாநில அரசு பால்டலில் (காஷ்மீர்) 800 கானல் நிலத்தை வழங்கிய பொழுது பிரிவினைவாதிகளும் அடிப்படைவாதிகளும் இதை 'இஸ்லாமிற்கு அச்சுறுத்தல்' என்று கூறி ஒரு சூறாவளியையே உருவாக்கினார்கள் என்பதை நினைவுப் படுத்தி பாருங்கள் ​​. அமர்நாத் யாத்ரீகர்களுக்கு தற்காலிக ஓய்வறை அமைப்பதற்காக இந்த நிலம் வாடகைக்கு விடப்பட்டது. ஃபாரூக் அப்துல்லா, முப்தி முகமது சயீத் மற்றும் அலி ஷா கிலானி ஆகியோர் இந்த நடவடிக்கையை 'காஷ்மீர் மண்ணுரிமையின்' மீது வீழ்ந்த ஒரு அடி என்று கூறி இதை எதிர்த்தனர். ஆனால் உண்மையில், இது இந்துக்களின் நம்பிக்கையின் மீது வீழ்ந்த அடியாகும்.

இந்தியா முழுவதும், குறிப்பாக ஜம்முவின் இந்து சமூகம், ஒன்று திரண்டு வந்து, இரண்டு மாதங்களுக்கு மிகப்பெரிய மக்கள் இயக்கத்தை ஏற்பாடு செய்து, இந்து எதிர்ப்பு அரசாங்கத்திற்கும் தலைவர்களுக்கும் சவால் விடுத்தது. அரசாங்கம் தனது முடிவை மாற்ற வேண்டியிருந்தது. சிவ பக்தர்களான இந்துமத யாத்ரீகர்களுக்கு இந்த வெற்றி ஒரு வரலாற்றையே உருவாக்கியது. அத்துடன், இந்து சமுதாயம் ஒழுங்கமைக்கப்பட்டு சக்திவாய்ந்ததாகவும், தங்கள் மதத்தைப் பாதுகாக்க உறுதியுடனும் இருந்தால் வரலாற்றைக் கூட மாற்ற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டியது.

கிழக்கில் அமர்நாத் யாத்ரீகர் மீது மூன்று பயங்கரவாத தாக்குதல்கள் நடந்தபோதிலும் பனியுறை சிவனாரின் பக்தர்களின் நெஞ்சு நிமிர்ந்தே இருந்தது, யாத்திரையும் தடையின்றி தொடர்ந்தது. இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர், அமர்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட கடுமையான பனிச்சரிவில் 300 க்கும் மேற்பட்ட சிவ பக்தர்கள் உயிர் இழந்தனர். இத்தகைய பயங்கரமான சூழ்நிலைகளில் கூட, அமர்நாத் யாத்ரீகர்களின் கால்கள் தடுமாறியது இல்லை.

இந்நாட்களில் நடந்துவரும் அமர்நாத் யாத்திரைக்குக்கூட பல்வேறு அரசியல், மத மற்றும் தீவிரவாதத்தை குறித்த சவால்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. பாஜக அரசின் உத்தரவின் படி, குறிப்பாக பிரதமர், நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வழிகாட்டுதலின் படி ஜம்மு-காஷ்மீரின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் ஜிஹாதி நோக்கங்களை புதைத்து விட்டன .

பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பு காரணமாக பயணிகளின் உற்சாகமும் கரை புரண்டு ஓடுகிறது. இந்து யாத்திரிகர்கள் சிறிதும் பயமின்றி தாங்கள் ஆராதனை செய்யும் சிவபெருமானை தரிசனம் செய்ய காத்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான தேசபக்தர்களின் மனதில், பயம், பீதி மற்றும் சோர்விற்கான அடையாளம் கூட சிறிதும் காணப்படவில்லை. உண்மை என்னவென்றால், பெரும் நம்பிக்கைக்கு எதிரில் ஏகாதிபத்தியத்தின் நம்பிக்கையின்மை தூள் தூளாகிவிட்டது.

இந்து சமுதாயத்தின் ஒற்றுமை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் அவர்களின் மத சின்னங்களின் மீது கொண்டுள்ள ஆழ்ந்த பக்தி நேயம் ஆகியவற்றைக் கண்டு, ஜம்மு-காஷ்மீரில் தீவிரமான பிரிவினைவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் தீவிர காஷ்மீர் தலைவர்களின் முகங்களில் அச்சம் தெரிகின்றது. பயணிகளின் பாதுகாப்பிற்காக தேசிய நெடுஞ்சாலை மூன்று மணி நேரம் மூடப்படுவது குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 'இதனால் காஷ்மீரி மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுகிறது.' போன்ற எதிர்மறை பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. அதாவது, லட்சக் கணக்கான இந்துக்களின் உயிரைப் பாதுகாக்க, சிலர் சில மணி நேர சிரமத்திற்கு ஆளானால், அதை இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை.

மேலும், இந்த தீவிரவாதத்தை மற்றும் பிரிவினைவாதத்தை தூண்டும் மக்களும் இந்த பயணத்திற்கு அனுதாபம் காட்டும் ஒரு முதலை நாடகத்தை நடத்துகின்றனர். பலத்த மழை மற்றும் பனிப்பொழிவுக்குப் பிறகு இந்த நெடுஞ்சாலை பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் பொழுது, ​​இந்த அடிப்படைவாத காஷ்மீர் தலைவர்கள் சிரமத்திற்கு ஆளாவதில்லையா? பிரதம மந்திரி அல்லது வேறு எந்த மத்திய அமைச்சரின் காஷ்மீர் விஜயத்தின் பொழுதும் காஷ்மீரில் உள்ள அனைத்தும் மூடப்படும் பொழுது ஒரு சாமான்ய மனிதன் படும் கஷ்டம் அவர்கள் கண்ணில் படுவதில்லையா? சிரமத்தின் இந்த முழு நாடகமும் பாஜக, இந்துத்துவா மற்றும் தேச விரோத அரசியலை சுட்டிக்காட்டுபவை ஆகும்.

இந்த அமர்நாத் யாத்திரை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காஷ்மீரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதன் மூலம் சம்பாதிப்பதற்கான வழிவகைகளையும் உருவாக்குகிறது என்பதை இந்த இந்து எதிர்ப்பு சக்திகள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். ஹோட்டல் வைத்திருப்பவர்கள், படகுக்காரர்கள், குதிரைக்காரர்கள், பல்லக்கு தூக்கிகள், தின்பண்டங்கள் விற்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகியோருக்கு மிகப் பெரும் வணிக நன்மைகளைக் கொடுக்கின்றது. அமர்நாத் யாத்திரை மற்றும் அன்னை வைஷ்ணவ தேவி யாத்திரை ஆகியவை ஜம்மு-காஷ்மீரின் அனைத்து சுற்றுலாத் தொழில்களின் ஆதாரம் என்பதை தீவிரவாதிகள் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த காஷ்மீர் வணிகர்களின் ஒத்துழைப்புடன் பயணம் வெற்றிகரமாக முடிகின்றது என்பது உண்மைதான் எனினும் இந்த ஒத்துழைப்பு சேவை நோக்கம் அல்லது சகோதரத்துவத்தை முன்னிட்டு இருப்பதை விட பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாகவே உள்ளது. பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த வசதிகளின் விலை கூட வானத்தையே தொட்டு விடுகின்றது. அப்படி இருந்தும் கூட இந்து யாத்ரீகர்களின் நம்பிக்கை, மன வலிமை மற்றும் ஆன்மீக விசுவாசம் சிறிது கூட பங்கப் படுவது இல்லை.

இந்து எதிர்ப்பு பிரிவினைவாதிகள் , பயங்கரவாதிகள் மற்றும் கடுமையான பனிப்புயல் ஆகியவை கூட இந்தப் பயணத்தை நிறுத்த முடியாது. இந்துக்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட சக்தியையும் நம்பிக்கையையும் அறிமுகப்படுத்துவதற்காக பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய இந்த பயணம் மேலும் பல நூற்றாண்டுகள் தொடரும். சனாதன சைவ மதத்திற்கே உகந்த காஷ்மீரின் பனிப்பாறைகள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் ஹர-ஹர மகாதேவா என்ற கோஷம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

நிறைவடைந்தது..

Post a Comment

0 Comments