16.06.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நாகர்கோவில் நடைபெற்ற ஆர் எஸ் எஸ் தென் தமிழ்நாடு மாநில பொது கூட்டத்தில் மூன்று புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீ HV சேஷாத்திரி ஜி அவர்கள் எழுதிய “நமது விழாக்கள்” என்ற புத்தகத்தை ஆர்எஸ்எஸ் அகில பாரத பிரச்சாரர் பிரமுக் ஸ்ரீ அருண்குமார் ஜி அவர்கள் வெளியிட ஆர்எஸ்எஸின் திருச்செந்தூர் நகர் தலைவர் மானனீய ஸ்ரீ ராமகிருஷ்ணர் ஜி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஆர்எஸ்எஸ் வடதமிழகம் தலைவர் பேராசிரியர் Dr. மானனீய ஸ்ரீ குமாரசாமி ஜி அவர்கள் எழுதிய “மொட்டு ஒன்று மலராகிட” என்ற புத்தகத்தை ஆர்எஸ்எஸ் அகில பாரத பிரச்சாரர் பிரமுக் ஸ்ரீ அருண்குமார் ஜி அவர்கள் வெளியிட ஆர்எஸ்எஸின் மதுரை மாவட்ட தலைவர் மானனீய ஸ்ரீ சந்திரன் ஜீ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
ஸ்ரீ ஹரியேட்டன் ஜி அவர்கள் எழுதிய “வழிப்போக்கர்களும் வழி துணையும்” என்ற புத்தகத்தை ஆர்எஸ்எஸ் அகில பாரத பிரச்சாரர் பிரமுக் ஸ்ரீ அருண்குமார் ஜி அவர்கள் வெளியிட திருப்பூர் மாவட்ட தலைவர் மானனீய ஸ்ரீ பழனிசாமி ஜி அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இவ்விழாவில் தென் பாரத தலைவர் பேராசிரியர் Dr.ஸ்ரீ வன்னியராஜன் ஜி அவர்களும் , தென்தமிழ்நாடு செயலாளர் ஸ்ரீ ஆடலரசன் ஜி அவர்களும் தென் தமிழ்நாடு ஊடகத்துறை பொறுப்பாளர் ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஜி அவர்களும் மற்றும் சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments