SETU-21

“தேச எ‘ல்லைப் பாதுகாப்பு விழிப்புணர்வு
சமுதாயத்தின் பொறுப்பு”: ஆர்.எஸ்.எஸ்
புதுடெல்லி (டில்லி), டிசம்பர் 29
தேசத்தின் எல்லையோரம் வசிக்கும் மக்கள் நமது ராணுவத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும் அது எல்லைப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியம் - தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் சார்பில் மே 27 அன்று டில்லியில் நடந்த கருத்தரங்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத பொதுச் செயலாளர் சுரேஷ் ஜோஷி இவ்வாறு கூறினார். எல்லையோர கிராம்வாசிகளுடைய ஒத்துழைப்பு எந்த அளவுக்கு எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் படையினருக்கு கிடைத்து வருகிறதோ அந்த அளவுக்கு அவர்களுக்கு சாதகம். அண்டை வீட்டுக்காரர் நம்மை எதிரியாகப் பார்த்தால் அது கவலை தரும் விஷயம். நாட்டுக்குள் தேசத்திற்கு புறம்பான பல சக்திகள் பாதுகாப்புக்கு சவாலாக உருவாகி இருக்கிறார்கள் என்றால் தவறு நம்முடைதான். உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு அரசாங்கத்தைக் காட்டிலும் சமுதாயத்தின் விழிப்புணர்வு மிக முக்கியம்.

பாகிஸ்தானை பாரதம் ஒரு போதும் எதிரியாக நினைத்ததில்லை, ஆனால் பாகிஸ்தான் பாரதத்தை பகைவனாகவே கருதுகிறது. சீனாவை நாம் ஒருபோதும் பகைவனாக பார்த்ததில்லை ஆனால் நமது பகைவன் போலவே சீனாவின் நடவடிக்கைகள் உள்ளன. பங்களாதேஷ் விஷயம் வேறு மாதிரி. அது நமக்கு நன்மை செய்வதாக இல்லை. ஊடுருவல் வடிவில் சந்தடி இல்லாமல் ஆக்கிரமிப்பு நடக்கிறது. அண்டை நாடு நட்பு நாடாக இருப்பது அவசியம். நட்பு என்பது ஒருதலைப்பட்சமாக இருக்க முடியாது. பாரதம் ஒரு போதும் நட்புக்கு குந்தகமாக இருந்ததில்லை என்பதை உலகத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

இப்போதெல்லாம் ஆயுதங்கள் இல்லாமல் ஆக்கிரமிப்பு நடந்து வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்வோம். போதைப் பொருள்கள் கடத்தல், கள்ளநோட்டு நடமாட்டம், பசு கடத்தல் இவற்றையெல்லாம் செய்வது யார்? தேசத்தில் ஊடுருவி தேசத் துரோகம் செய்யும் சக்திகள் இன்று நாட்டில் காணப்படுகின்றன. இதனால் மிகப் பெரிய நெருக்கடி. இந்த தேசத்தின் கலாசாரத்தை அழிப்பதற்கு பலவிதமான முயற்சிகள் நடக்கின்றன. மனிதன் அறிவாற்றல் பெற்றவன் ஆவதை நாம் எதிர்ப்பது இல்லை. ஆனால் பண்பு கெடும்போது வாழ்க்கை வீழ்ச்சி அடையத் தொடங்குகிறது. தேசத்திற்கும் இது நல்லதல்ல. வெளிநாடுகளிலிருந்து எப்படிப்பட்ட நூல்கள் உள்ளே வருகின்றன? தொலைக்காட்சியில் எப்படிப்பட்ட படங்கள் எல்லாம் காட்டப்படுகின்றன? வெளிநாட்டு சேனல்களை பார்ப்பதில் ஏற்பட்டு வரும் மோகம் குறித்து விழிப்புடன் இருப்போம்.

உலகிலேயே இரண்டு பெயர்கள் கொண்ட நாடு நம் நாடு தான். ஒன்று பாரதம் மற்றது இந்தியா. பாரதம் என்று சொன்னால் தொன்மையான விஷயங்கள் அனைத்துடனும் மக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். மக்களை அந்த வேரிலிருந்து பிரித்தெடுப்பதில் ஆங்கிலேயர்கள் வெற்றி கண்டார்கள். இன்றளவும் நாம் ’இந்தியா’வை கைவிடத் தயாராக இல்லை. பாரதத்தின் சொந்தக்காரர்கள் என்று யாரும் கிடையாது என்ற கருத்தை பதிய வைப்பதில் ஆங்கிலேயர்கள் தொடர்ந்து முயற்சி செய்தார்கள். யாரும் இந்த நாட்டவர் இல்லையாம். ஆரியர்கள் வட துருவத்திலிருந்து வந்தார்களாம், முகலாயர்கள் அதன் பிறகு வந்து சேர்ந்தார்கள். அதைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள்… ’நீங்கள் முதலில் வந்தவர்கள் நாங்கள் பிறகு வந்தவர்கள்’ என்ற வாதத்தை பதிய வைத்தது ஆங்கிலேயர்கள். சமுதாயத்தின் அறிவுஜீவிகள் இந்த சதிக்கு இரையானார்கள் நாமும் வெளியில் இருந்து வந்தவர்கள்தான் என்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். எப்படி இந்த தேசம் ஒவ்வொரு முறையும் தலை தூக்க முடிந்தது? இந்த தேசம் ஆயுதங்களுக்கும் அஞ்சுவதில்லை, பொய்யான வாதங்களுக்கும் பணிவது இல்லை என்று நாட்டுக்குள் இருக்கும் பிரிவினைவாத சக்திகளுக்கு புரிந்து விட்டது. பாரதம் வாழ்ந்திருப்பது ஒழுக்கத்தின் அடிபடையில் என்பதை அவை புரிந்து கொண்டு விட்டன. ஒழுக்கத்தை சிதைத்தால் தேசம் அழிந்து போகும் --அப்படிப்பட்ட போர்தான் இப்போது நடக்கிறது - இவ்வாறு சுரேஷ் ஜோஷி கூறினார்.

கருத்தரங்கில் பேசிய முன்னாள் விமானப்படை அதிகாரி ஏர் மார்ஷல் டாக்டர் ஆர். சி. வாஜ்பாய், எல்லை பாதுகாப்பாக இருந்தால்தான் தேசம் வளர்ச்சி அடைய முடியும் என்றார். சீனா நாடு பிடிக்கும் மனப்பான்மை கொண்டது. நாம் உஷாராக இருக்க வேண்டும். அண்டை நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் போதைப் பொருட்களும் ஆயுதங்களும் உள்நாட்டு பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்துபவை. இவ்வாறு அந்த ராணுவ அதிகாரி கூறினார். ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


ஆர்கனைசர் இதழ் நடத்தும்
ஆலயப் பாதுகாப்புக் கருத்தரங்கம்

பெங்களூரு (கர்நாடகா), டிசம்பர் 29
டெல்லியில் இருந்து 70 ஆண்டுகளாக வெளிவரும் ஆங்கில இந்துத்துவ தேசியஇதழ் ”ஆர்கனைசர்’ பெங்களூருவில் ராஜாஜிநகர் பகுதியில் 2019 ஜனவரி 5 அன்று“ திருக்கோயில் பாரம்பரியங்களைப் பாதுகாப்போம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்றை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி போர்டு உறுப்பினர் எஸ். குருமூர்த்தி, தெலங்கானா ஹிந்து தேவாலய ரக்ஷண ஸமிதியின் சுவாமி கமலானந்த பாரதி, திருக்கோயில் பக்தர்கள் சொசைட்டியின் டி. ஆர். ரமேஷ், ஆர்கனைசர் இதழ் ஆசிரியர் பிரபுல் கேத்கர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். (தொடர்புக்கு: 8277025046).

பனிமழையில் பாரத ராணுவத்தினரின் பரிவு:
2,500 சுற்றுலாப் பயணிகள் மீட்பு
காங்டாக் (சிக்கிம்) டிசம்பர் 29
சிக்கிம் தலைநகர் காங்டாக் அருகில் நாது லா பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 300-400 வாகனங்களில் பயணம் செய்துகொண்டிருந்த 2,500 சுற்றுலாப் பயணிகள் திடீர் பனிப்பொழிவால் வாகனங்கள் நகரமுடியாமல் குளிரில் சிக்கித் தவித்தார்கள். உடனடியாக பாரத ராணுவ வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் அவர்களை அழைத்துச் சென்று காப்பாற்றினார்கள். அன்றிரவு அனைவருக்கும் உணவு, பாதுகாப்பான தங்குமிடம் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள். இதுதவிர ராணுவத்தினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் சாலை நெடுக படிந்திருந்த பனிக்கட்டிகளை நீக்கி போக்குவரத்தை மறுபடியும் இயங்கச் செய்து விட்டார்கள். பயணிகள் நாது லா கணவாய் வழியே சென்று விட்டு பாரத-சீன எல்லையோரம் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

பாகிஸ்தான் அமைப்புக்கு பாக்யநகரில் என்ன வேலை?
ஹைதராபாத் (தெலுங்கானா) டிசம்பர் 29

ஹைதராபாத் காவல்துறை தாவத் எ இஸ்லாமி என்ற அமைப்பு சனிக்கிழமையன்று நடத்த இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று காவல்துறையினர் சுட்டிக்காட்டினார்கள். அது பாகிஸ்தான் அமைப்பு என்று இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக எம்எல்ஏ ராஜா சிங் கூறினார். பாகிஸ்தானில் கூட இந்த அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகள் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். காவல்துறை ஆணையரிடம் அவர் அளித்த புகாரில் அந்த அமைப்புக்கு அனுமதி தருவதை எதிர்த்துள்ளார்.

Post a Comment

0 Comments