Seva activity in Kanchipuram Sangha Shiksha varga for college students


ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) கல்லூரி மாணவர்களுக்கான 20 நாட்கள் பண்பு பயிற்சி முகாம் கடந்த மே மாதம் 27-ந் தேதி முதல் ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வருகின்றது. முகாமில் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 103 ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.
முகாமில் இளைஞர்களின் ஆளுமை பண்பு மற்றும் திறன் வளர்க்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. தூய்மை மற்றும் சேவையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக முகாமில் கலந்து கொண்டவர்கள் இன்று (04.06.2018) காலை 6 மணி முதல் 8 மணி வரை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். பொது மக்கள் சிலரும் ஸ்வயம்சேவகர்களுடன் இணைந்து சேவை பணியில் ஈடுபட்டனர். காஞ்சிபுரம் பிரபல ஓவியர் திரு. தனுசு அவர்களும், திரு இந்தர் சந்த், மஹாவீர் ஜூவல்லரி உரிமையாளர் அவர்களும், சேவை நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தனர் தூய்மை மற்றும் சேவையை மக்களுக்கு விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன. இந்த சேவைப் பணியில் ஆர்.எஸ்.எஸ்ஸின் தென் மண்டல அமைப்பாளர் திரு. ஸ்தாணுமாலயன் அவர்களும், வட தமிழகத்தின் செயலாளர் (சேவை பிரிவு) திரு. பிரகாஷ் அவர்களும் கலந்து கொண்டு சேவைப் பணியில் ஈடுபட்டனர். சேவை நிகழ்ச்சியின் இறுதியில் டாக்டர். பி.டி. சரவணன் அவர்கள் சேவையின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை நிகழ்த்தினார். 

 















Post a Comment

0 Comments