ராஷ்ட்ர ஸேவிகா சமிதியின் அகில பாரதக் கார்யகாரிணி மற்றும் பிரதிநிதி சபா பைடக் அதன் தலமையகமான் நாக்பூரீல் ஜூலை 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடை பெற்றது. இதில் 33 மாநிலங்களிலிருந்து 202 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் பிப்ரவரி 2016 முதல் ஜூன் 2016 வரை உள்ள காலத்தில் மறைந்த கார்யகர்த்தர்கள், எல்லைப்பகுதியில் வீரகதி அடைந்த இராணுவ சகோதரர்கள், மற்றும் சமூகத்தில் உள்ள மறைந்த பிரபல மனிதர்களுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு 17 மாநிலங்களிலிருந்து 43 ஸேவிகைகள் பிரவீண் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர் என்று அறிவித்தனர். ராஷ்ட்ர ஸேவிகா சமிதி துவங்கி 80 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. அதற்காக பல விசேஷ நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் தலைநகர் புது டெல்லியில் கார்யகர்த்தா பிரேரணா ஷிபிர் நடக்கப்போகின்றது. அதற்கான திட்டங்கள் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. நேபாளத்திலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தனர். சேவிகா சமிதி நிறுவிய லக்ஷிமிபாய் கேள்கர் பற்றி அவரது புதல்வர் தினகர்ராவ் எழுதிய ஸ்திரி சக்தி ஒரு கண்ணோட்டம் என்ற நூல் இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது.
வளர்ந்து வரும் பயங்கரவாதம், சமுதாய சமத்துவம் பற்றி பேச்சு, சர்ச்சா நடத்தப்பட்டது. சேவிகைகளுக்கு மானனீய சாந்தா அக்கா, மானனீய பிரமிளாதாயி மோடே சீதா காயத்ரி வழிகாட்டினார்கள்.
பொது சிவில் சட்டம் தான் தேச ஒற்றுமைக்குத் தீர்வு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வரும் ஆண்டு சமிதி வெளியிடும் தினசரி காலண்டரின் மைய விஷயம் நாட்டைக் காப்பது பரம புண்ணியமான காரியம் என்பது.
நாடு சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் முடியப்போகின்றது. 1857 முதன் இன்று வரை நடந்த எழுச்சியூட்டும் விஷயங்களை மக்களிடம் கொண்டு செல்வது முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
காந்தாமணி நாராயண்
0 Comments