தீர்மானம் 1
சிறப்பான மருத்துவ கவனம் மற்றும் சாமானிய மருத்துவ சேவை – இவை அனைத்தும், அனைவரும் பெறவேண்டும்.
எல்லா குடிமக்களுக்கும் நோயற்ற, வளமான வாழ்க்கை அமைவதை உறுதி செய்தல் வேண்டும். இதற்காக மக்கள் சுகாதாரமான, மற்றும் தூய்மையான வாழ்க்கை முறையை நடத்துவதையும், மருத்துவ வசதிகளை, சாதாரண பொது மக்களும் பெற வழி வகை செய்ய வேண்டும். சுகாதாரமான வாழ்க்கை முறையை கடைபிடிக்காமை வளர்ந்து வருவதால், இன்று பொது மக்கள் பல நோய்களால் பீடிக்கப்படுகிறார்கள். இதற்கான மருத்துவ செலவு கட்டுகடங்காமல் உள்ளது, மருத்துவ சேவைகளும் எட்டாக் கனியாகிவிட்டன. இதனால் பல குடும்பங்களில் தங்கள் வீட்டின் பொருள் ஈட்டும் நபரின் மருத்துவ செலவினைகூட செய்ய முடியா நிலை மை ஏற்படுகிறது. மேலும் இக்குடும்பங்களில் கடன் சுமை ஏறும் சூழலையும் காண முடிகிறது. இந்நிலை கண்டு பிரதிநிதி சபா பெரும் கவலை கொண்டுள்ளது.
வளமான வாழ்விற்கு திடமான உணவு, சுத்தம், தினசரி பயிற்சி, யோகா, இறைவழிபாடுகள், புண்யக்காரியங்கள், மற்றும் நல்ல நடைமுறையான வாழ்க்கை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது இன்றியமையாததாகிறது. குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் நேரத்தில் போடப்படுவதும் அதுபோலவே மிகவும் அவசியமானதாகிறது. மேலும் குடிமக்கள் போதை பொருட்களிலிருந்து விடுபட்டவர்களாக இருத்தல் வேண்டும். இதனை நோக்கி, ஸ்வயம்சேவகர்கள் உட்பட அனைத்து மனசாட்சி உள்ள குடிமக்களும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பிரதிநிதி சபா எண்ணம் கொள்கிறது.
அனைத்து மருத்துவ சேவைகளையும் நகரங்களை நோக்கி மையப்படுதுவதால், தொலைதூர கிராமங்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் குறைபாடு ஏற்படுகிறது. மருத்துவத்துறையில் மனித வளமும், மருத்துவ வசதிகளும் போதிய அளவில் இல்லாமையால் கிராம பகுதிகளில், சிகிச்சைக்கும், சிகிச்சை அனுமதிக்கும், ஆய்விற்கும் நீண்ட வரிசையும், காத்திருப்பும் ஏற்படுகிறது. சிலருக்கு அது கிட்டாமலே போகிறது. இது போல மருத்துவ வசதிகள் கிட்டாமல் போவதற்கும், மருத்துவத்தின் தரம் தாழ்ந்ததற்கும், மருத்துவத்தின் மீதான நம்பகத்தன்மை இல்லாமல் போனதற்கும், மருத்துவ படிப்பிற்கான செலவு அதிகரித்து வருவது மிக முக்கிய காரணி ஆகும்.
தரமான மருத்துவ வசதிகள் இந்நாட்டின் பெண்கள், குழந்தைகள், உட்பட அனைத்து பொது மக்களுக்கும் சுலபமாக கிட்ட வேண்டும். இது நடைபெற வேண்டுமானால் நாடெங்கும் குறிப்பாக பழங்குடி மக்கள் வாழ்விடம், மற்றும் கிராமங்களுக்கு செவ்வனே இயங்கும் சுகாதார, மருத்துவ வசதிகள் நீட்டிக்கப்பட வேண்டும். தொடர் மருத்துவ சேவைகளுக்காகவும், நிபுணர் ஆலோசனைகள் வழங்கப்படவும் தேசமெங்கும் தகவல் தொழில்நுட்பங்களை சிறப்பாக செயல் படுத்தப்படவேண்டும்.
தர்ம சிந்தனையோடும் பொது நோக்கோடும், பல மத சமூக, சமுதாய நிறுவனங்கள் நாட்டின் பல இடங்களில் மருத்துவமனைகளை நடத்தி வருகின்றன. இவர்கள் பொது மக்களுக்கு நல்லதொரு சிகிச்சையினை அளிப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை சிறப்பாகவும், நேர்மையாகவும் செய்து வருகின்றனர். இவை மேலும் அதிகரிக்கும் வண்ணம், இது மாதிரியான முயற்சிகளை அரசு ஊக்குவிக்கவேண்டும். இது போன்ற முயற்சிக ளை பாராட்டுவதோடு, சமூக சிந்தனை இயக்கங்களையும், அறக்கட்டளைகளையும், தொழிலதிபர்களையும் இவ்வழியில் பயணப்பட பிரதிநிதி சபா அழைப்பு விடுக்கிறது. இதே சிந்தனையோடு – பொதுமக்கள், சமுதாய பங்களிப்பு கூடிய கூட்டுறவு நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
சமீபத்தில் தன வரவு செலவு கணக்கில் மத்திய அரசு 3000 பொது மருந்து (ஜெனரிக்) மருந்தகங்கள் உருவாக்க முன்வந்திருப்பதும், பல மாநில அரசுகள் சில வருடங்களாக இலவச மருந்து விநியோகங்களை ஏற்படுத்தி இருப்பதும் மிகவும் பாரட்டிற்கு உரிய செயல்களாகும்.
பொதுவான (ஜெனரிக்) மருந்துகள் முன்னிறுதப்படுவதும்- மருந்து விலைகள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதும் – காப்புரிமை அமைப்பு உருவாவதும் - மருந்துகள் சாதாரண மனிதனையும் சென்றடைய மிகவும் வழிவகை செய்கின்றன.
மருந்துகள் தரம் வாய்ந்தவைகளாக இருப்பதை உறுதி செய்ய, அவை குறிப்பிட்ட இடைவெளிகளில் ஆய்வகங்களில் சோதனை செய்யப்படவேண்டும். மேலும், யுனானி , ஆயுர்வேதம் மற்றும் மாற்று வழி மருந்துகளும் உருவாக்கப்பட்டு, சோதனைகள் செய்து செம்மைப்படுத்தப்பட வேண்டியதும் முக்கியமானதாகிறது.
எல்லா மக்களும் நல்ல வாழ்க்கை முறை பின்பற்றி, தாய்சேய் நலன்கள் பேணி, சத்தற்ற உணவிலிருந்து விடுபட்டு – போதை அடிமைத்தனத்திலிருந்து விடிவிக்கப்பட்டு நோயற்ற வாழ்க்கை வாழ்வதற்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு, ஸ்வயம்சேவகர்களையும், தன்னார்வ நிறுவனங்களையும், தேச பக்தர்களையும் அகிலபாரதிய பிரதிநிதி சபா அறைகூவலிட்டு அழைக்கிறது.
எல்லா மருத்துவ சேவைகளும் அனைவரையும் சென்றடைய தேவைப்படும் அளவிற்கான கட்டுமானம், வழிமுறைகள், மற்றும் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் தீட்டுவதோடு மட்டுமல்லாமல் அதற்கு தேவையான நிதி ஆதரங்களையும் ஒதுக்கவேண்டும். இதற்காக ஒழுங்குமுறை நடைமுறைகளிலும், மருத்துவ வழிமுறைகளும் ஒருங்கிணைந்த விரிவாக்கமும், விதிமுறைகளும், போதனைகளும் ஆய்வுகளும் ஏற்படுத்தப்படவேண்டும், இதற்கான சட்டபூர்வ ஏற்பாடுகள் வெளிப்படியானதாக இருத்தல் வேண்டும்’
தீர்மானம் 2
அனைவருக்கும் ஏதுவான, தரமான கல்வி குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும்.
கல்வி என்பது எந்த ஒரு நாடும் முன்னேற்றம் காண்பதற்கான முக்கிய காரணமாகும்.. இவற்றை சமூகம் மற்றும் அரசாங்கம் ஊட்டமளித்து, ஆதரவளித்து, ஊக்குவிக்க வேண்டும். கல்வி என்பது மாணவர்கள் முழுமையாக வளர்வதற்கான வ்ருக்ஷதின் விதையாகும். நாட்டின் நலனுக்காக, ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி , உணவு, உடை, இருப்பிடம் வேலை ஆகியவற்றை உறுதி செய்வது அரசாங்கத்தின் கடமையாகும்.
பாரத நாடு அதிக அளவு இளைஞர்களை கொண்ட நாடாகும் . இளைஞர்கள் எவ்வித தடையுமின்றி அவர்களுடைய உள்சார்பு திறன் மற்றும் தகுதிகேற்ப அறிவியல், தொழில் நுட்ப, பொருளாதார வளர்ச்சியில் பங்கேற்க செய்ய வேண்டும். இன்று அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தரமான கல்வியை தரவேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளனர். எங்கே கல்வி பெறுவதற்கான மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதோ, அங்கே தரமான கல்வி என்பது கடினமாகிறது. போதிய ஒதுக்கீடு மற்றும் போதிய முன்னுரிமை, தேவையான அளவுக்கு அளிக்கப்படாத முந்தைய அரசின் கொள்கைகள், கல்வி நிறுவனங்கள் லாப நோக்கத்துடன் செயல்பட ஏதுவாகி விட்டன. இன்று ஏழை, மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைப்பதில்லை. இதன் காரணமாக பொருளாதார ஏற்றதாழ்வு ஏற்பட்டுள்ளது. இது மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
3. இன்றைய சம கால கல்வி சூழலில், அரசாங்கம் போதுமான வளங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்குவதில் பொறுப்பேற்க வேண்டும். இத்தருணத்தில் கல்வி துறையை வர்த்தகமயமாக்கப்படுவதை கட்டுபடுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கட்டுபடுத்தினால், மாணவர்கள் தாங்க முடியாத கட்டணத்தை செலுத்தி கல்வி பயில வேண்டிய தேவை இராது.
அரசு தன்னுறுதியுடன் கூடிய சுய அணுகுமுறை, தரம், கட்டமைப்பு, சேவைகள், கட்டணம் ஆகியவற்றை பலப்படுத்தும் கொள்கைகளை வெளிப்படையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அகில பாரத பிரதிநிதி சபை, ஒவ்வொரு குழந்தையும் மதிப்பு கல்வி, தேசியவாத, வேலை மற்றும் திறன் சார்ந்த கல்வியை சமமான வாய்ப்பு அளிக்கும் சூழலில் கிடைக்க பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளது.
தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சரியான பயிற்சி, அதற்கான ஊதியம் மற்றும் ஆசிரியர்களின் கடமையுணர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்வது மிகவும் அவசியமாகும்.
பாரம்பரியமாக நம்முடைய சமூகம் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி அளிப்பதற்கு ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. அனைத்து சமூக, மத அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், ஆகியோர் மாணவர்களுக்கு தரமான கல்வியளிப்பதில் தங்களின் பங்கை தங்களுடைய கடமையாக கொள்ள வேண்டும். அதுவும் குறிப்பாக கிராமங்கள், பழங்குடி மக்கள் வாழும் பகுதிகள், பின் தங்கிய பிரதேசங்கள் போன்ற இடங்களை கண்டறிந்து அவர்களுக்கு தரமான கல்வியை அளித்து அனைத்து தரப்பினரையும் தேச முன்னேற்றத்தில் இணைப்பதற்கு ஆவன செய்யுமாறு மத்திய மாநில அரசுகளை அகில பாரத பிரதிநிதி சபை கேட்டுக்கொள்கிறது.
0 Comments