திருப்பூர் ஆர்.எஸ்.எஸ். செயலர் மீது கொலைவெறித் தாக்குதல்
November 8, 2012
-
சில முன் தகவல்கள்
திருப்பூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ். செயலாளராக இருப்பவர் எஸ்.ஆனந்த் (37). இவர் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், மகாதேவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். இவர் மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவர் (பாஜக) சதீஷ்குமாரின் சித்தப்பா மகன். மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார் . துடிப்பான இளைஞர் அதே சமயம் அமைதியான சுபாவம் கொண்டவர். திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தந்தையாகவும் இருப்பவர்.
இவருக்கும் இவரது அண்ணன் சதீஷ்குமாருக்கும் இந்து முன்னணியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜ்குமாருக்கும் கடந்த விநாயக சதுர்த்தி சமயத்திலேயே (செப். 30) மிரட்டல் வந்தது. எஸ்.எம்.எஸ். வடிவில் வந்த அந்த கொலைமிரட்டல் குறித்து காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்த மிரட்டலில், மேட்டுப்பாளையத்தில் பாஜக சார்பில் நகராட்சித் தலைவராக இருக்கும் சதீஷ்குமாருக்கு கடுமையான மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
அந்த மிரட்டலை விசாரித்த காவல்துறை, கடந்த அக். 30ல் தான் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்தது. அபு தாஹிர் என்ற 21 வயது இளைஞர் கைது செய்யப்பட்டார். உண்மையில் அவன் வெறும் அம்பு மட்டுமே என்று அப்போதே இந்து இயக்க நிர்வாகிகள் காவல்துறையில் புகார் செய்தனர். ஆனால் காவல்துறை கண்டுகொள்ளவில்லை.
கோவை மாவட்டத்தின் புறநகர்ப் பகுதியான மேட்டுப்பாளையம் கடந்த பத்தாண்டுகளாகவே இஸ்லாமியத் தீவிரவாதிகளின் கூடாரமாக இயங்கி வருகிறது. கோவையில் 1980 – 2000 ஆண்டுகளில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் கும்மாளமிட்டு வந்தனர். 1998 கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு அரசு எடுத்த கடும் நடவடிக்கை காரணமாக, கோவை பகுதியில் இருந்த இஸ்லாமிய வெறியர்கள் அருகிலுள்ள திருப்பூர், சத்தியமங்கலம், மேட்டுப்பாளையம் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். அதிலும் மேட்டுப்பாளையம் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கான தோதான இடமாகவே மாறிவிட்டது. குறிப்பாக, தவ்ஹீத் ஜமாஅத், தமுமுக, அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி, பாப்புலர் பிரன்ட், அதன் அரசியல் பிரிவான ஜனநாயக கட்சி (எஸ்.டி.பி) ஆகியவை வலுவாக இங்கு காலூன்றின.
இக்கட்சிகளுக்குள் உறுப்பினர் சேர்ப்பதில் கடும் போட்டி ஏற்பட்டது. தமிழகம் முழுவதிலுமே இந்த முஸ்லிம் அமைப்புகளுக்குள் நிலவும் பூசலும் மோதலும் அனைவரும் அறிந்தது தான். இதில் தாங்களே முஸ்லிம்களின் ஒரே காப்பாளர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த இயக்கங்கள் பல வழிமுறைகளை கடைபிடிக்கின்றன. அதில் முக்கியமானது, இந்துக்கள் மீதும் இந்து இயக்கங்கள் மீதும் முஸ்லிம்களிடையே வெறுப்புணர்வை வளர்ப்பது.
மேட்டுப்பாளையத்தில் ஏற்கனவே இந்து இயக்கங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. கோவையில் இஸ்லாமிய வெறியர்கள் தலைவிரித்தாடியபோதே மேட்டுப்பாளையத்திலும் அதன் தாக்கம் இருந்தது. 1995, டிசம்பர் 31ல் இந்து முன்னணி உறுப்பினர் கார்த்திகேயன் மேட்டுப்பாளையத்தில் கொல்லப்பட்டார். அதே நாளில், இந்து முன்னணி ஆதரவாளரான டாக்டர் ஹிரியன் மேட்டுப்பாளையத்தில் அவரது கிளினிக்கில் தாக்கப்பட்டார்; கத்திக்குத்துக் காயங்களுடன் அவர் உயிர் பிழைத்தார்.
அதன் பிறகு சுமார் 15 ஆண்டுகள் கழித்து இப்போது முஸ்லிம் தீவிரவாதம் தனது கோர முகத்தைக் காட்டத் துவங்கி இருக்கிறது. அதன் விளைவாகவே- முஸ்லிம்களின் அடாவடிக்கு எதிராகவே- பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சதீஷ்குமாரை மேட்டுப்பாளையம் மக்கள் நகராட்சித் தலைவராகத் தேர்வு செய்தனர் என்பது குறிப்பிட வேண்டிய தகவல். இதை அங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளால் ஏற்க முடியவில்லை. அவர் பதவி ஏற்றதிலிருந்தே அவருக்கு பலவித மிரட்டல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன
அதன் தொடர்ச்சியாகவே, அவரது தம்பியும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலாளருமான ஆனந்த் மீதான தாக்குதலைக் காண வேண்டும்.
நடந்தது என்ன?
கடந்த நவம்பர் 6 ம் தேதி, இரவு 6.45 மணியளவில், பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த ஆனந்தை மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நடூர் பாலம் அருகே வழிமறித்துள்ளனர். அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தனர். யார், எவர் என்று சுதாரிப்பதற்குள் ஆனந்தின் பின்மண்டையில் இரும்பு ராடால் தாக்கியுள்ளனர். அதில் நிலைகுலைந்த ஆனந்த் வாகனத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் அந்த நேரம் மின்தடை நேரமாக இருந்ததால், இருளில் நடந்து யாருக்கும் உடனே பிடிபடவில்லை. ஏதோ வாகன விபத்து என்று எண்ணிக் கொண்டு தான் சிலர் அங்கு ஓடிவந்துள்ளனர்.
அதற்குள், ஆனந்தின் முகத்தில் இரும்பு ராடாலும் 'எல்' ஆங்கிளாலும் மூன்று முறை கடுமையாகத் தாக்கி உள்ளனர். மக்கள் கூட்டம் வரத் துவங்கியவுடன், அவரை விட்டுவிட்டு அவர்கள் தங்கள் வாகனத்தில் தப்பினர். அருகில் வந்து பார்த்தபோது தான், அனைவருக்கும் அறிமுகமான ஆனந்த் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்திருக்கிறது. உடனே உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி செய்துவிட்டு, கோவையில் உள்ள கங்கா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆனந்துக்கு ஆறு மணிநேர அறுவை சிகிச்சை செய்து, தீவிரமாகப் போராடி, அவரது உயிரை மருத்துவர்கள் காப்பாற்றினர்.
ஆனந்தின் முகத்தில் கீழ்த்தாடை மூன்று இடங்களில் உடைக்கப்பட்டிருந்தது. நெற்றியில் விழுத்த அடியில் முன்மண்டை பிளந்திருந்தது. தவிர மூக்கும் பலமாக சிதைக்கப்பட்டிருந்தது. மூன்று அடிகளும் கச்சிதமாக திட்டமிடப்பட்டவை என்பதும், அதைச் செய்தவர்கள் கொலைவெறிச் செயல்களில் கைதேர்ந்தவர்கள் என்பதும், ஆனந்துக்கு ஏற்பட்டுள்ள காயங்களில் இருந்து தெரிகிறது. இந்தத் தாக்குதலுக்கு 'எல் ஆங்கிள்' பயன்படுத்தப்பட்டிருப்பதே, கொலையாளிகளின் கொடூரத்தைக் காட்டுகிறது என்கிறார் காவல் துறை அதிகாரி ஒருவர். நல்லவேளையாக அங்கிருந்த மக்கள் ஓடி வரவும், கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவரை விட்டுவிட்டு தப்பியுள்ளனர். இன்னும் ஒரு அடி விழுந்திருந்தாலும் ஆனந்தைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்திருக்கும். இப்போதும் கூட அவர் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் பல மாதங்கள் ஆகலாம்.
மழுப்பும் காவல்துறை
இந்தத் தாக்குதல் மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது என்பதற்கு, தொழில்முறை கொலையாளிகளின் அணுகுமுறை கடைபிடிக்கப்பட்டிருப்பதே சான்று. இதை உள்ளூர் போலீசாரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் என்ன காரணத்தாலோ, தாக்கியவர்களைப் பிடிப்பதில் அசட்டையாக காவல்துறை இருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு ஒருநாள் முன்னதாக நடந்த இருவேறு நிகழ்வுகளுடன் இச்சம்பவத்தை முடிச்சு போட்டு பிரச்னையைத் திசைதிருப்பவே காவல் துறை முயற்சிக்கிறது.
சாலையில் செல்லும்போது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்துக்கள்- முஸ்லிம்களிடையே தகராறு இருந்து வந்ததாகவும், அதுதொடர்பான மோதலில் இஸ்லாமிய இளைஞர் ஒருவரை இந்து இயக்கத்தவர் கைகளால் தாக்கியதாகவும் ஒரு வழக்கு கடந்த நவ. 5 ஆம் தேதி பதியப்பட்டது. இவ்வழக்கில் இரு தரப்பிலும் புகார்கள் பெறப்பட்டு இந்து முன்னணியைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் எதிரொலியாகவே ஆனந்த் மீது முஸ்லிம்கள் தாக்கியதாக காவல்துறையினர் பத்திரிகையாளர்களிடம் வதந்தியைப் பரப்பினர். உண்மையில் எதிர்வினைச் செயலில் ஈடுபடுபவர்கள் திட்டமிட்டு, மின்தடை நேரத்தில், ஹெல்மெட் அணித்து வந்து, கொடூர ஆயுதத்தால் தாக்க மாட்டார்கள் என்பதை காவல்துறையினர் வசதியாக மறைக்கப் பார்க்கின்றனர்.
இன்னொரு சம்பவம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில் பள்ளி சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக இஸ்லாமிய முதியவர் ஒருவர் பிடிபட்டதாகும். மேட்டுப்பாளையம், ஏசுதுரை சந்து, ஓடந்துறை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமியை வீட்டின் அருகில் உள்ள விறகுக் கடை காவலாளி அக்பர் அலி (67) என்பவன் பலாத்காரம் செய்ததாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் காவலாளி அக்பர் அலியை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆரம்பத்தில் அக்பர் அலி மீது வழக்கு பதிய மேட்டுபாளையம் காவல் துறையினர் மிகவும் தயங்கியதாகத் தகவல். இந்து இயக்கங்களின் ஆர்ப்பாட்ட முயற்சிகளுக்குப் பிறகே, அந்த காமக் கொடூரனை துடியலூர் மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பியுள்ளனர். இப்போது பிஞ்சை சிதைத்த அந்த முஸ்லிம் தாத்தா சிறையில் இருக்கிறான். இச்சம்பவம் நவ. 6 ம் தேதி நடைபெற்றது. இதுவும் முஸ்லிம்களின் கோபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்பட்டது.
எனினும் விநாயக சதுர்த்தி சமயத்திலேயே ஆனந்துக்கும் சதீஷ்குமாருக்கும் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது எப்படி? ஆக, முஸ்லிம் ரவுடிகள் தாக்குதலை நடத்த ஒரு தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தது உறுதியாகிறது. வாய்ப்பு /காரணம் கிடைத்தவுடன் அவர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொண்டுள்ளனர்.
தாக்குதல் நடந்து 24 மணி நேரத்துக்கு மேலாகியும், உள்ளூரைச் சேர்ந்த கொலையாளிகள் பிடிபடவில்லை என்பது காவதுறையின் அசிரத்தையையே காட்டுகிறது. உண்மையில், காவல்துறையினர் முஸ்லிம் அமைப்புகள் மீது அச்சம் கொண்டிருக்கின்றனர். மாநில அரசும் முஸ்லிகளுக்கு சாதகமாக இருப்பதால், எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியாமல் காவல் துறை தடுமாறுகிறது.
உடனடி எதிரொலிகள்
ஆர்.எஸ்.எஸ். செயலாளர் தாக்கப்பட்டவுடன் மேட்டுப்பாளையம் பகுதியில் வன்முறை வெடித்தது. உடனடியாக கடைகள் அடைக்கப்பட்டன. மக்களின் கோபம் அரசு பஸ்கள் மீது திரும்பியது. பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்துக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில் அது முற்றிலும் எரிந்து சாம்பலானது . தவிர, மேட்டுப்பாளையம் சாலையில், துடியலூர், பெரிய நாயக்கன் பாளையம் உள்ளிட்ட பல இடங்களில் சாலை மறியல் நடத்தப்பட்டது . இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உதகை சாலையில் 2 மணி நேரத்துக்கு மேல் மறியல் நடைபெற்றது. தற்போது மேற்கு மண்டல காவல்துறை தலைவர் (ஐ.ஜி.) தலைமையில் 300க்கு மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவை., நீலகிரி திருப்பூர் மாவட்டங்களில் உடனடியாக பந்த் மற்றும் கடையடைப்புக்கு இந்து முன்னணி அழைப்பு விடுத்தது. அதை ஏற்று திருப்பூர், மேட்டுப்பாளையத்தில் புதன்கிழமை (நவ.7) பெருவாரியான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. நவ. 8ம் (வியாழன்) தேதி, மேட்டுப்பாளையத்தில் கோட்ட அளவிலான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு இந்து இயக்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே கோவை ஐ.ஜி. சுந்தரமுர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமா ஆகியோரிடம் இந்து இயக்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து தொடர் தாக்குதல்கள் குறித்து புகார் செய்துள்ளனர்.
கலவர பூமியாகிவரும் தமிழகம்
மேட்டுப்பாளையம் தாக்குதல் குறித்து இந்து முன்னணி கோவை கோட்ட செயலாளர் கிஷோர் குமார் கூறிய தகவல்கள்:
ஆர்.எஸ்.எஸ். திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆனந்த் மீதான தாக்குதல் மிகவும் திட்டமிடப்பட்ட கொடிய செயல். சமீப காலமாக கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெருகிவரும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் ஆதிக்கம் மிகவும் கவலை அளிக்கிறது. முஸ்லிம் அரசியல் கட்சிகளாக செயல்படும் பல அமைப்புகள் தீவிரவாதிகளின் புகலிடமாகவே உள்ளன. குறிப்பாக, கோவை குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய முஸ்லிம்கள் பலர் தமுமுக, பாப்புலர் பிரன்ட் அமைப்புகளில் செயல்படுகின்றனர் . இது காவல் துறைக்கும் தெரியும் . உளவுத்துறை செயல்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்திருக்கின்றன . முஸ்லிம்களின் ஒட்டுமொத்த வாக்கு மாயையில் அதிமுகவும் சிக்கிவிட்டது. அதனால் தான், முஸ்லிம் வெறியர்களின் அடாவடித் தனங்களை காவல்துறையினர் வேடிக்கை பார்க்கின்றனர். மொத்தத்தில் தமிழகம் கலவர பூமியாகி வருகிறது.
அண்மையில் திருப்பூரில் நொய்யல் வீதியில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் தடையை மீறி பக்ரீத் கூட்டு தொழுகை நடைபெற்றது. அதேபோல கடந்த நவ. 5 ம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு கொடுக்க சென்ற தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அங்கேயே தொழுகை நடத்தி இருக்கின்றனர். இந்த இரு சம்பவங்களையும் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசாரால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது.
அரசின் செயலற்ற தன்மை காரணமாக முஸ்லிம் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது. அண்மையில் திருப்பூரில் இருந்து கோவைக்கு விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யக் கொண்டு சென்றபோது கல்வீச்சுத் தாக்குதலுக்கு உள்ளாயின. இதுகுறித்து புகார் செய்தபோதும் காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை.முஸ்லிம்கள் இடையே வன்முறையைத் தூண்டும் நிகழ்ச்சிகள் அடிக்கடி நடக்கின்றன. கலவர உள்நோக்கத்துடன் இஸ்லாமிய அமைப்புகள் செயல்படுகின்றன. கோவையில் 1990 -1998 ல் கோவையில் இயங்கிய முஸ்லிம் வன்முறைக் கும்பல்கள் மீண்டும் தலைதூக்கத் துவங்கிவிட்டன. விரைவில் இது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசு மீது நிர்பந்தம் ஏற்படுத்தும் வகையில் , மாநிலம் முழுவதும் இந்து முன்னணி அறவழிப் போராட்டங்களில் ஈடுபடும். ஹிந்துக்கள் திருப்பித் தாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அரசு கண்டும் காணாமல் இருக்கக் கூடாது என்றார்.
இப்போது ஆனந்த் உடல்நிலை அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவர் விரைவில் நலம் பெற பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான சூழலில் அவரது குடும்பத்துக்கு ஆதரவாக இருப்போம். முஸ்லிம் கொலை வெறியர்களின் அடாவடித்தனத்துக்கு எதிராக நாடு முழுவதும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிப்போம். ஏனெனில், இன்று ஆனந்துக்கு நேரிட்டது நாளை யாருக்கும் நேரலாம். கையாலாகாத அரசுகள் ஆளும்வரை கொலைகாரர்கள் கொட்டம் அடங்காது. நமது நாட்டை பாதுகாக்க நாம் தான் போராட வேண்டும். அதற்கு பாரத அன்னை அருள் புரியட்டும் !
பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் முயற்சி
இது தொடர்பாக, கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளான ஆனந்தின் அண்ணனும், மேட்டுப்பாளையம் நகராட்சித் தலைவருமான சதீஷ்குமாரிடம் பேசினோம் அவர் கூறியது:
முஸ்லிம் வன்முறைக் கும்பல் கடந்த பல மாதங்களாகவே என் மீதும் ஹிந்து இயக்கங்கள் மீதும் வெறுப்பூட்டும் பிரசாரத்தை நடத்தி வருகிறது. தமிழகத்திலேயே பாஜக சார்பில் நகராட்சித் தலைவராக ஒருவர் மேட்டுப்பாளையத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால் தான் எனக்கும், என்னுடன் இருப்போருக்கும் எஸ்.எம்.எஸ். வடிவில் விநாயக சதுர்த்தி சமயத்தில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது. அப்போதே காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், எனது தம்பி கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி இருக்க மாட்டான்.
தமிழகம் முழுவதுமே முஸ்லிம் அடிப்படைவாதிகள் பாஜகவுக்கும் ஹிந்து இயக்கங்களுக்கும் எதிரான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு, ஹிந்து இயக்கங்களின் முக்கியமான தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்தத் தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட பயங்கரவாத செயல் தான்.
மேட்டுப்பாளையத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த அதே நிலையை உருவாக்க முஸ்லிம் குண்டர்கள் முயற்சிக்கின்றனர். அதன்மூலமாக பாஜகவுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்தால் இதுதான் நிலைமை என்று மக்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த முயற்சிகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர். அவர்களின் திட்டம் நிறைவேறாது.
சமீபகாலமாக மேட்டுப்பாளையத்தில் 'பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. அதன் அரசியல் பிரிவான சமூக ஜனநாயகக் கட்சி தான் முஸ்லிம்களிடையே வெறுப்பூட்டும் பிரசாரத்தை அதிக அளவில் நடத்துகிறது. நகரின் அமைதியை சீர்குலைப்பதே இவர்களது இயக்க வழிமுறையாக இருக்கிறது. இந்த நேரத்தில் பாஜக ஊழியர்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும். இந்த சவாலை நாம் எதிர்கொள்வோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்றார்.
tamilhindu.com
1 Comments
The growing Islamic fundamentalism and the passive attitude of the ruling party is a grave concern.It is time the public wakes up to the reality
ReplyDelete