Chennai - Sandesh (SETHU)


சேது
--------------------------------------------------------------------
சென்னையிலிருந்து; செய்தியுடன் பண்பாடு
கலி 5113 நந்தன ஆனி 17 ( 2012, ஜூலை 1)

மிஷனரிகளின் மனித வர்த்தகம் அம்பலம் 
ஓடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் 'ப்ளேச்சிங் டிரஸ்ட்' என்னும் கிருஸ்துவ மத பிரச்சாரர்களால் நடத்தப்படுகிற அநாதை இல்லங்களில் கைதிகளாக வைக்கப்பட்டு இருந்தனர். சமீபத்தில் தமிழ்நாடு சமூக நல துறை ஆள் கடத்தல் சம்பவங்களை வெளிபடுத்தின. 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நல்ல கல்வி மற்றும் வசதிகளை கொடுப்பதாக கூறி பெற்றோகளிடமிருந்து எடுத்து வந்து அவர்களை மதம் மாற்றுகின்றனர். இந்த குழந்தைகள் அன்பற்ற சூழ்நிலையில் கைதிகளாக வைக்கப்பட்டு இருகின்றனர். ஆங்கிலோ இந்தியர்களின் மேலாதிக்கம் ஏற்பட இக்குழந்தைகள் மூளை சலவை செய்ய படுகிறார்களா என்று பார்வையாளர்கள் சந்தேகிக்கின்றனர். 

பாட நூலில் ஆண்டாளுக்கு அவமதிப் பு 

ஆண்டாள், பெரியாழ்வாரின் வளர்ப்பு குழந்தை. வைஷ்ணவ ஆழ்வார்களில் ஒருவர். கோதை எனப்படும் ஆண்டாள் பூமாதாவின் அவதாரமாக கருதபடுகிறாள். திருநெல்வேலியில் உள்ள மனோன் மணீயம் சுந்தரனார் பல்கலை கழகத்தின் தமிழ் பாட புஸ்தகத்தில் அவரை 'தேவதாசி' என்று விவரிக்கப்பட்டுள்ளது. இதை எழுதியவர் டேனியல் செல்வராஜ் என்னும் கம்யூனிஸ்ட். இதை வெளியிட்ட பாடநூல் குழுத் தலைவர் பியூலா குமரி என்னும் கிருஸ்துவர். ஹிந்து கடவுளரை இழிவு படுத்தும் இந்த செயலைக் கண்டித்து ஹிந்து முன்னணி மற்றும் ஏ.பி.வி.பி செயல்வீரர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இத்தகைய சர்ச்சைக்குரிய பக்கங்களை நீக்கி விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அரசும் அந்தப் பாடப் பகுதியை நீக்கி உத்தரவிட்டது.

வெளியேற வேண்டிய அரசின் வீண் உத்தரவு 

ஹிந்து அறநிலையத் துறை ஆணையர், அறங்காவலர்கள் உள்ள கோவில்களில் கூட ஒரு பொது தகவல் அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் என்று சுற்றறிக்கை வெளியிட்டார். வடபழனி ஸ்ரீ வேங்கீஸ்வரர் அழகர் பெருமாள் மற்றும் நாகதம்மன் கோயில் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலர் இந்த அறிக்கையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி சந்துரு,"கோவில் ஒரு பொது நிறுவனம். அதன் செயல்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் நடத்தினாலும் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டது" என்று கூறியுள்ளார். கோவில்களை நிர்வகிக்கும் பொறுப்பு ஆன்றோர்களை கொண்ட ஹிந்து குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதே ஹிந்துக்களின் வேண்டுகோள். இந்த தீர்ப்பு ஹிந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று நோக்கர்கள் கருதுகின்றனர்.

Post a Comment

1 Comments